புதன், 21 ஏப்ரல், 2010

இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் இரட்டை குழந்தைகள் பிரசவித்த அமெரிக்கப் பெண்

இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்ட பெண்ணொருவர் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த அதிசய சம்பவம் அமெரிக்க நியூஜெர்ஸி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் உலகிலேயே இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்ட பின்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்ததல் பெண் என்ற பெருமையை ஸ்டெபானியா டெமாயோ (Stefania deMayo) என்ற மேற்படி பெண் பெறுகிறார்.


2008 ஆம் அண்டு இறுதியில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஸ்டெபானியாவுக்கு (29 வயது), குறைந்தது ஒரு வருட காலத்திற்கு கருத்தரிக்கக் கூடாது எனவும் அவ்வாறு மீறி கருத்தத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், ஸ்டெபானியா அறுவைச் சிகிச்சை செய்து சில மாதங்களிலேயே கருத்தரித்தார்.

ஸ்டெபானியாவுக்கு கார் விபத்தில் இறந்த சீன் கிளெக் (Sean Clegg)என்ற 14 வயது சிறுவனின் இருதயமே பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்படி அபூர்வ பிரசவம் குறித்து ஸ்டெபானியாவின் கணவரான றிச்சர்ட் (Hubby Richard) (35 வயது) விபரிக்கையில், ““அனைத்து பெருமையும் சீன் கிளெக்கிற்கே சேரும்'' என்று கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல