சனி, 10 ஏப்ரல், 2010

வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, வைட்டமின் K, ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்.தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் உடலில் சேமித்து வைக்க முடியாது. எனவே தினமும் இவற்றை உட்கொள்ள வேண்டும். B, காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களும் வைட்டமின் Cயும் நீரில் கரையும் வைட்டமின்கள்.

வைட்டமின் A:

இது எல்லா செயல்களும் உருவாகவும் வளரவும் அத்தியாவசியமானது. பல் அமைப்பு ஒழுங்காக இருப்பதற்கும் இது தேவை. வைட்டமின் A குறைந்தால் இந்தப் பகுதிகளில் உள்ள புறத்தோல் திசுக்கள் சிதைவடைந்துவிடும். ஆண்களிடத்தில் ஆண்மை சக்தியை இயல்பாக வைத்திருப்பதும் வைட்டமின் A தான். மங்கலமான ஒளியில் சகஜமாகப் பார்க்கவும் வைட்டமின் A உதவுகிறது.

வைட்டமின் A குறைந்தால்

வைட்டமின் A உள்ள பொருட்களை போதிய அளவு உட்கொள்ளாத போது உடலில் வைட்டமின் A குறைகிறது. சில விதமான நோய்கள் தாக்கும் போதும் இது குறைகிறது. வெளிச்சத்தில் இருந்துவிட்டு இருட்டுக்குச் செல்லும் போது அந்த இருட்டுக்குச் கண் பழகுவது தாமதமாவது வைட்டமின் A குறைபாட்டின் அறிகுறி வைட்டமின். வைட்டமின்A குறைவதால் மங்கிய ஒளியில் பார்வை பாதிக்கப்படுகிறது. இதுதான் மாலைக்கண் நோய் என்று சொல்லப்படுகிறது.

வைட்டமின் A குறைபாடு அதிகாரித்தால் செராப்தால்மியா (XEROPHTHALMIA) என்ற நிலை உருவாகிறது. கண்களின் பார்க்கும்திறன் குறைகிறது. அதன் சுருங்கி வி ரியும் தன்மை மறைகிறது. கண் சாம்பல் நிறமாகும். இந்த நிலை தொடர்ந்தால் கண் நோய்வாய்ப்படும். இது சீரியஸான நிலை இதன் விளைவாக பார்வையே பறிபோகவும் கூடும்.

வைட்டமின் A குறைபாட்டினால் புறத்தோல் திசுக்கள் பாதிக்ப்படுவதால் தோல் கரடு முரடாக மாறுகிறது. வைட்டமின் A-வை அளவுக்கதிகமாக உட்கொண்டாலும் அது உடலை பாதிக்கிறது. எப்போதும் தூக்கச் கலக்கம், தலைவலி, வாந்தி அரிப்பு, சரும வியாதிகள், பசியின்மை ஆகியவை இதன் அறிகுறிகள்.

வைட்டமின் A-எப்படிக் கிடைக்கிறது? ரெடினால் Retinal, கரோடெனாய்ட் Carotenoids ஆகிய இரண்டு விதங்களில் வைட்டமின் A செயல்படுகிறது. சுறாமீன் எண்ணெய், வெள்ளாடு, செம்மறியாடு, பசு ஆகிய விலங்குகளின் கல்லீரல், வெண்ணெய், நெய், முட்டையிலும் எல்லா விதமான பால் பவுடர்களிலும் வைட்டமின் A உள்ளது. காய்கறிகளிலும் கீரைகளிலும் கரோடெனாய்ட் உள்ளது. கேரட், பூசனிக்காய், பப்பாளி, மாம்பழம் ஆகியவற்றிலும் இது இருக்கிறது. காய்கறி எண்ணெய்கள் பதப்படுத்தப்பட்ட வடிவில் கிடைக்கின்றன (வனஸ்பதி), அவற்றில் அரசு விதித்துள்ள அளவுகளின் படி குறிப்பிட்ட அளவு ரெடினால் இருக்க வேண்டும்.
Image Hosted by ImageShack.us

1 கருத்து:

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல