வியாழன், 15 ஏப்ரல், 2010

தூக்கமின்மையால் ஏற்படும் தொந்தரவுகள்


தூக்கம் கெடுவதால் பல தொல்லைகள். அதிலும் குறிப்பாக உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு போன்ற நோய்களுக்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாகிறது.

இந்த வரிசையில் தூக்கமின்மையால் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. அதாவது புற்றுநோயின்றி வாழ வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு தூக்கம் அவசியமாகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள 18 வயது முதல் 65 வயது வரையிலான சுமார் 5 ஆயிரத்து 968 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பெண்களின் தூங்கும் தன்மை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவை பரிசோதிக்கப்பட்டன.மேலும் பெண்களின் புற்றுநோய் ஏற்படும் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

வாரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி அவர்களின் புற்றுநோய் வாய்ப்பைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு 47 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல