திங்கள், 24 மே, 2010

50 வருடங்களுக்குப் பிறகு மன்னிப்புக்கோரினார்

இங்கிலாந்தில் பாலகனாக இருந்த போது செய்த திருட்டுக்கு தாத்தா ஆன பிறகு ஒருவர் பிராயசித்தம் தேடி கொண்டிருக்கிறாராம்.

ஜோன் பிப்பி (John Bibby) என்னும் அந்த முதியவர் 1960 ஆம் ஆண்டு 15 வயது சிறுவனாக இருந்த போது கிழக்கு யாக்ஷையர் (East Yorkshire) பகுதியில் அவர் வேலை செய்து வந்த கேக்விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்து கேக் பாக்கெட்டை திருடி சென்று விட்டாராம். இந்த தவறு அவரை உறுத்தி கொண்டே இருந்ததாம். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று 50 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் இந்த திருட்டுக்கு அவர் பிராயசித்தம் தேடி இருக்கிறாராம்.

குறிப்பிட்ட அந்த கடைக்காரரை (Les Simpson, 79வயது) தேடி கண்டுபிடித்து அவரிடம் தான் செய்த திருட்டை ஒப்பு கொண்டு அதற்கு பதிலாக புதிய கேக் பாக்கெட் ஒன்றை வாங்கி கொடுத்தாராம். இந்த மன்னிப்புக்கு பிறகே அவர் மனதில் நிம்மதி உண்டானதாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல