வெள்ளி, 21 மே, 2010

இரு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலைக்கு உள்ளான சிறுமிக்கு மேலதிகமாக இரு சிறுநீரகங்கள் வளர்ச்சி

இரு சிறுநீரகங்களும் செயலிழக்க ஆரம்பித்ததால் உயிருக்கு போராடிய சிறுமியொருவர், புதிதாக மேலதிகமாக வளர்ந்த இரு ஆரோக்கியமான சிறுநீரகங்களால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஏஞ்சல் பர்டன் (Angel Burton)என்ற மேற்படி 8 வயது சிறுமி, கைக் குழந்தையாக இருந்த போது நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இரு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலைக்கு உள்ளானார்.

அவருடைய சிறுநீரகப்பை சரியான முறையில் இயங்காததால் அவரது சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் ஒழுங்காக வெளி யேற்றப்படாத நிலை தோன்றியது.

5 ஆவது வயதில் அவரது சிறுநீரகங்கள் இரண்டும் நிரந்தரமாக சேதமடைந்தன.

இதனையடுத்து ஷெபியல்ட் சிறுவர் மருத்துவமனையில் ஏஞ்சல் பர்டனுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செயற்கை வால்வு ஒன்றைப் பொருத்தும் வகையில் மேற் கொள்ளப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சையின் போது, சிறுமியின் உடலில் மேலதிகமாக இரு சிறுநீரகங்கள் வளர்ச்சியடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சல் பர்டனின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து வந்த நிலையிலேயே மேற்படி மேலதிக சிறுநீரகங்கள் புதிதாக தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு சிறுநீரகங்களுக்குப் பதிலாக 4 சிறுநீரகங்களைக் கொண்ட மேற்படி சிறுமி மருத்துவ உலகை திகைப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஏஞ்சல் பர்டனின் மேலதிக சிறுநீரகங்கள் இரண்டும் இயல்பாக செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் அவரது உடல்நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல