வெள்ளி, 21 மே, 2010

பிறந்த நாள் உணவை கருக்கிய மனைவியை கொன்ற கணவன்

தனது பிறந்த நாளுக்கான மாலை உணவை அளவுக்கதிகமாக சமைத்து கருக்கிய மனைவியை அறைந்து கொன்ற உயரதிகாரியான கணவர் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை பிரித்தானிய வார்விக் கிறவுண் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னணி தொலைக்காட்சி சேவையின் முகாமையாளர்களில் ஒருவரான ஜொனாதன் விக்ஸ் (Jonathan Wicks 48 வயது) என்பவரே இவ்வாறு மனைவியை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

தனது பிறந்தநாள் விருந்துபசாரத்துக்கான மாட்டு இறைச்சி அளவுக்கு அதிகமாக வாட்டப்பட்டு கருகியிருப்பதை அவதானித்த ஜொனாதன், தனது மனைவியான சாராவை (Sarah 49 வயது) கண்டித்துள்ளார். இதனையடுத்து சாரா கோபத்துடன் சமையல் பாத்திரங்களை ஜொனாதன் மீது வீசி யுள்ளார்.

மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த ஜொனாதன் விக்ஸ் அவரை ஓங்கி அறைந்துள்ளார்.

அடி சாராவின் கழுத்தில் விழவும் இரத்தக்குழாய் வெடித்து சம்பவ இடத்திலேயே அவர் உயிழந்துள்ளார்.

ஜொனாதனும் சாராவும் திருமணம் செய்தது முதற் கொண்டு மனமொத்த தம்பதியாக வாழ்ந்ததாகவும் அவர்களிடையே இதுவரை சண்டை சச்சரவு ஏற் பட்டதில்லை எனவும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெவித்தனர்.

ஜொனாதன் சாரா தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல