புதன், 26 மே, 2010

லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட எலிசபெத் மகாரணியின் முன்னாள் மருமகள்

தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நிருபரிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் மருமகள் சாரா பேர்குஷன் (sarah ferguson) ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டார்.

ராணி எலிசபெத்தின் 2வது மகன் இளவரசர் ஆன்ட்ரூ (Prince Andrew). இவரது முன்னாள் மனைவி சாரா பேர்குஷன். நியூஸ் ஆப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் இவரை சமீபத்தில் சந்தித்தபோது அவர் தன்னை இந்தியத் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து நாட்டில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆன்ட்ரூவை சந்திக்க விரும்புவதாகவும் சாராவிடம் கூறினார்.

ஆன்ட்ரூவை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமானால் தனக்கு ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று சாரா கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த நிருபர் முதல் கட்டமாக ரூ.28 லட்சத்தை சாராவிடம் கொடுத்தார். அதை அவர் வீடியோவாக படம் எடுத்தபோதுதான் தன்னிடம் பணம் கொடுத்தவர் நிருபர் என்று சாராவுக்கு தெரிந்தது.

உடனே சாரா அந்த பணத்தைத் திருப்பி கொடுத்ததுடன், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பிரிட்டிஷ் அரச குடும்ப வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல