வியாழன், 13 மே, 2010

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு

உலகில் காணப்படும் பிரச்சினைகளில் அனேகமானவை வளர்முக நாடுகளிலேயே காணப்படுகின்றன என்பது வருத்தத்துக் குரிய விடயம். ஆனால் இவை சாபக்கேடு என்றோ, தலைவிதி என்றோ சொல்லிவிடு வதற்கில்லை. கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் என்ற பல்வேறு பண்பு களே இந்நிலைக்குக் காரணமாகின்றன. இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், இதுபோன்ற பிரச்சினைகளில் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது பெண்களாக இருக்கின்றமையே.

தொழில் பாதுகாப்பின்மை, திருமணம் சார்ந்த பிரச்சினைகள், பிரசவ கால மரணங்கள் என்று பல்வேறு காரணங்களால் தினந் தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் தம் உயிரைப் பறிகொடுத்து வருகிறார்கள். இதில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் ஏற்படும் மரணங்கள் முக்கியமான இடத்தைப் பெறு கின்றது<. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறை களினால் ஆண்டு தோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங் கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக் கிறது. இதில் முறையான கல்வியறிவு, பொருளாதாரம் என்பவற்றோடு சமூக ஏற்றத் தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் சமூக சமத்துவமும் துணை நிற்கின்றன. ஆபிரிக்கா போன்ற பின்தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவை கள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆபிரிக்கா உட்பட 35 பின்தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது. இலங்கை, இந்தியா போன்ற வளர்முக நாடுகளிலும், மேலைக் கலாசாரத்தை வரித்துக்கொண்டிருக்கும் நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாசாரப் பண்புகளுக்கு உட்படுத்தப் பட்டு , மரபுவழி வாழ்க்கையை வாழ்ந்து வரும் கிராமத்துப் பெண்களிடம் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை. உலகெங்கும் சுமார் 5 கோடிப் பெண்கள் சரியான கருத்தடைச் சாதனங்கள் உபயோ கிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், இரண்டரைக் கோடி பெண்கள் கருத்தடைச் சாத னங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர். எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதற்கு தகுதி யற்ற மருத்துவர்களின் பெருக்கமும் ஒரு கார ணம்தான். ஆயினும் இது போன்ற மருத்து வர்களை அடையாளம் கண்டுகொள்ளத்தக்க கல்வியறிவு பெண்களிடம் இல்லாமையே இதற்கு மூல காரணமாகும். கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய் வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது என்பதும் பிற்கா லத்தில் தாய்மையடையும் வாய்ப்பை கணிச மாகக் குறைத்து விடுகிறது என்பதும் உண் மைதான். ஆனால் இவை குறித்த தெளிவு நம் நாட்டுப் பெண்களிடம் இருக்கிறதா! என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம். வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரச ஈடுபாடு போன்ற காரணிகள் இல்லாவிட்டால் இத் தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந் துகொண்டேதான் இருக்கும் என்பது மட்டும் ஜீரணிக்கச் சிரமமான உண்மை. நாளேடு Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல