திங்கள், 17 மே, 2010

தலசீமியா "thalassemia" நோய்

ஒழுங்கின்மையற்ற பண்புகளையுடைய தலசீமியா இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோ பினின் அளவின் உற்பத்தியினை குறைத்து அவற்றை செயலிழக்கச் செய்கின்றது. மனித உடம்புக்கு தேவையான ஒட்சிசனை வழங்கும் செங்குருதி சிறுத்துணிக்கைகளிலேயே இந்த தலசீமியா மூலக்கூறு காணப்படுகின்றது.

இன்று உலகம் மூழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது இந்த நோய். உலகம் பூராவும் 150 மில்லியன் மக்கள் தலசிமியா நோயுடன் வாழ்கின்றனர். வருடாந்தம் 1இலட்சம் பேர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர்.

தலசீமியா நோய், தலசீமியா காவிகளாகிய இருவர் சேர்வதன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு மட்டுமே ஏற்பட முடியும்.சாதாரணமாக ஒருவரது செங்குருதியின் ஆயுட்காலம் நான்கு மாதங்களாயின் தல சீமியா நோயாளியின் இந்த ஆயுட்காலம் ஒரு மாதம் மட்டுமே.

தலசீமியா நோய் என்பது எங்களது இரத்தத்தில் இருக்கும் செங்குருதிச் சிறு துணிக்கைகள் பாதிப்புறும் ஒரு நோய் நிலையாகும்.செங்குருதிச் சிறு துணிக்கைகளுக்கு நிறத்தை காட்டுபவை அதில் காணப்படுவது ஹீமோ குளோபின்.

இந்த ஹீமோகுளோபின்களில் காணப்படும் குளோபின் எனும் புரதத்தின் உற்பத்தி பாதிப் படைவதனாலேயே செங்குருதி சிறு துணிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்பின் பின்னர் குழந்தை இரத்த சோகையினால் பாதிக்கப்படும் உடம்பு வெளிறும், மஞ்சள் நிறமாக மாறும், வளர்ச்சி குன்றும் சுறு சுறுப்புக்குறையும். சில வேளைகளில் பால் குடிக்கக்கூட முடியாதவாறு குழந்தைகளுக்கு மூச்சு திணறும். இவ்வாறு செங்குருதி சிறு துணிக்கைகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக கல்லீரல், மண்ணீரல் வீக்கமடையும். குழந்தைகளின் வயிறு முன்னோக்கி தள்ளிக் காணப்படும். என்புமச்சை விரிவடைந்து முகத்தோற்றம் மாறுபடும், தொடர்ந்து இரத்தம் கொடுப்பதன் காரணமாகவும் செங்குருதிச் சிறு துணிக்கைகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாகவும் சேர்கின்ற மேலதிக இரும்புச்சத்து ஈரல், இருதயம் போன்ற உறுப்புக்களிலும் சதையிலும், கபச்சுரப்பி போன்ற ஹேர்மோன் சுரப்பிகள் படிவதனால் இவற்றின் செயற்பாடுகளும் பாதிப்படையும்.

தலசீமியா நோய் பீடிப்பது எப்படி..?

எங்கள் சரத்தின் தோற்றம், செயற்பாடு ஆகியன பெற்றோரிடமிருந்து எமக்கு பெற்றுத் தரப்படும் பரம்பரை அலகுகளினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. குழந்தை ஒன்று உருவாகும் போது நடைபெறுவது ஒரு தாயினதும் தந்தையினதும் பரம்பரை அலகுகள் இணைவது ஆகும். அது போல செங்குருதிச்சிறு துணிக்கைளிலுள்ள ஹீமோ குளோபின் புரதம் உருவாகுவதும் பெற்றோரின் குளோபின் பரம்பரை அலகுகள் சேர்வதனால் ஆகும்.

தலசீமியா நோய் அறிகுறிகள் உள்ளவர்களிடையே திருமணம் நடப்பதால் இந்த நோய் பரவுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை தலசீமியா நோயுடன் பிறப்பதோடு இறக்கும் வரை இந்த நோய் தொற்றியிருக்கும்.
பெற்றோர்களின் மூலம் குழந்தைகளுக்கு தலசிமியா நோய் மரபுதியாக உட்செல்கிறது. தலசீமியா நோயை குணப்படுத்த முடியாத போதும் பரவுவதை தடுக்க டியும். மரபணு மூலம் உருவாகும் இந்த நோய் பரம்பரை பரம்பரையாக தொடரக் கூடியது. இது புற்று நோய் இரகத்தைச் சேர்ந்ததல்ல. பெற்றோல் ஒருவராவது நோய்க்கடத்தியாக இல்லாதிருப்பின் குழந்தை தலசீமியா நோய்க்கு ஆளாவதற்கு எந்தக் காரணமுமில்லை.

தமக்கு தலசீமியா நோய் உள்ளதா என நோய் தொற்றியுள்ளவருக்குத் தெயாது.
மருத்துவ பசோதனை மூலமே அதனை கண்டுபிடிக்க முடியும்.

தலசீமியா நோய் உள்ள இருவர் திருமணம் செய்வதை தவிர்ப்பதன் மூலம் இதனை தடுக்க முடியும். அதாவது ஒவ்வொருவரும் திருமணத்துக்காக துணையை தேர்ந்தெடுக்கு முன் இரத்தத்தை சோதித்து தாங்கள் தலசீமியாவைக் கடத்தும் ஒருவரா என்பதனை அடையாளம் காணுங்கள். அதனால் உங்களுக்கு திருமணம் பற்றிய புத்திசாலித்தனமான முடிவை எடுக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள். நீங்கள் நோய்க்கடத்தியானால் இன்னுமொரு நோய்க்கடத்தியுடன் திருமண பந்தத்தில் இணையாதிருப்பதே நல்லது. தலசீமியா மத்திய நிலையங்களில் இலவசமாக இரத்த பசோதனை செய்ய முடியும்.

தலசீமியா நோய் தொற்றியவர்களுக்கு இரத்தம் ஏற்றப்படுவதற்கான சிகிச்சையளிக்க பெருமளவு நிதி செலவிடப்படுகிறது. இவர்களுக்கு மாதாந்தம் புதிய இரத்தம் ஏற்றப்படுகிறது. பாதிப்புக்குள்ளான தலசீமியா நோயாளர்கள் கவனிக்கப்படாத நிலையிலும் சீராக புதிய இரத்தம் ஏற்றப்படாத நிலையிலும் அவர்கள் மரணத்தை தழுவ வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இதேவேளை இரத்தம் தொடர்ந்து ஏற்றப்படுவதால் உடம்பில் இரும்புச்சத்து சேர்கின்றது. அதனை சிறிய ரக இயந்திரம் ஒன்றின் மூலம் அகற்ற நேரிடுகிறது. இதனை நாளாந்தம் 8 மணி நேரம் மாதத்தில் 25 நாட்கள் உடம்பில் பொருத்திவைக்க நேடுகிறது. சரியான முறையில் சிகிச்சை பெற்றுக் கொண்டால் இந்த நோயாளர் பெரும்பாலும் சாதாரண மனிதர்கள் போன்று வாழ முடியும்.

சிகிச்சை முறை:

* ஓரளவு பாதிப்புக்குள்ளான அல்லது நோயை காவிச் செல்லும் தலசீமியா நோயாளர்களுக்கு சிகிச்சை தேவையில்லை.

*மாதாந்தம் இரத்தத்தினை சுத்திகரிக்க வேண்டும்.

* இரத்தத்தில் உள்ள தலசீமியா மூலக் கூற்றினை அகற்றுதல்

* தோலில் நிறமாற்றம்

* கண்கள் வெளுத்தல் அல்லது மஞ்சள் நிறமாகுதல்

* சாதாரணமாக ஏற்படும் நோய்கள் அடிக்கடி ஏற்படுதல்

* ஈரல் வீக்கம் தடுத்தல்

* திருமணத்திற்கு முன்னதாக இரத்த பரிசோதனை

* இரத்த உறவுகளின் திருமணத்தினை தவிர்த்தல்

* மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி மற்றும் அறிவூட்டல்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல