சனி, 19 ஜூன், 2010

கடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்கள் தோல்வியடைவதற்கான காரணங்கள்

மிகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கி மற்ற மாநிலத்தவர்களும் மூக்கில் விரலை வைக்குமளவுக்கு உயரத்திலிருந்த தமிழ்த் திரையுலகம் தற்போது மோசமான நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர்கள் புகழ் பெற்ற இயக்குனர்களின் படங்கள் கூட தடுமாறுவதும் தோல்வியினை தழுவுவதும் வழமையாகி வருகின்றது.

இதனால் தமிழ்த் திரையுலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பல கோடிகள் முதலீடு செய்யப்பட்ட பல திரைப்படங்கள் இன்னமும் வெளிவர முடியாத நிலையில் முடங்கிக் கிடக்கின்றன.

இந்தப் பிரச்சினையை பற்றி பலர் பல்வேறு கருத்துக்களை சொல்கிறார்கள். ஒரு படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கும் போதே அது பிரமாண்ட வசூலைத் தரும் என்ற ரீதியில் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகர்கள் கணக்குப் போட்டு உழைக்கிறார்கள். ஆனால் போட்ட முதலைக் கூட சில நேரங்களில் எடுக்க முடியாமல் போவதனால் தயாப்பாளர் கடன்காரராகிறார்.

நடிகரின் மார்க்கெட்டும் அவுட்டாகிறது.ஒரு படத்தை தயாக்கும்போதே அதன் பட்ஜெட்டை வரையறை செய்ய வேண்டும்.
ஆனால் இறுதி செய்யப்பட்ட பட்ஜெட்டை படம் தாண்டி செல்வதனால் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி விடுகின்றன.
மதராசுப் பட்டணம் பெரிய பட்ஜெட் படமாகும். இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். பெரிய படங்கள் இருபது வெளியானால் அதில் பத்துப் படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. இதற்குக் காரணம் அதிகமாக நாம் போடும் பட்ஜெட் தான் என்கிறார் ஆர்யா. மதராசு பட்டணம் கூட பட்ஜெட்டை எகிறி விட்டதாக அவர் கூறுகின்றார்.

இதை வேறுவிதமாக கூறுவதாயிருந்தால் நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர்கள் பெரிய இயக்குனர் நல்ல தொழில் நுட்ப கலைஞர்கள் என்று ஒழு குழு ஒரு படத்தில் பணிபுயும் போது அந்த படத்துக்கு எதிர் பார்ப்பு கூடுகிறது. இதனால் திட்டமிடப்பட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு பட்ஜெட் கூடுகின்றது.
குறிப்பிட்ட படம் வெளிவந்து வெற்றி பெற்றாலும் கூட அது போட்ட பணத்தை மட்டும்தான் மீட்டுத் தரும். வேறு பலன் இல்லை. ஒரு படத்தின் வெற்றி அப்பட இயக்குனருக்கும் அதன் கதாநாயக நடிகருக்கும் தான் இருக்கிறது. அவர்கள்தான் படத்தின் பட்ஜெட் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்க வேண்டும். மெகா பட்ஜெட் படங்கள் தயாரித்த பல தயாப்பாளர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். ஏ.வி.எம். சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற ஒரு சில திரைப்பட நிறுவனங்கள் தான் இன்றும் படங்கள் தயாரிக்கின்றன.

2010 ல் வெளியான கார்த்தி நடித்த “பையா' மட்டும்தான் நாற்பது கோடியை வசூல் செய்தது. அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும் இயக்குனர் லிங்குசாமி, கதாநாயகன் கார்த்தி ஆகியோன் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட பட்ஜெட்டை மீறாமல் செயல்பட்டமையையும் இங்கே குறிப்பிடலாம். அதாவது படத்தின் கதாநாயகனுக்கும் தன்னுடைய படம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பொறுப்பும் இருக்க வேண்டும்.

தமிழ்த் திரைப்படங்களின் தொடர் தோல்விகளுக்கு இன்னொரு காரணம் இருக்கின்றது. அதாவது கடந்த சில வருடங்களாக புற்றீசல் போல புதுப்புது தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களின் அனுபவமின்மையினால் உருவான இந்த சிறிய படங்களின் தோல்வியும் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.

முன் அனுபவம் எதுவுமில்லாமல் பணமிருந்தால் படம் எடுத்து விடலாம் என்ற நோக்கத்தில் படமெடுக்கும் தயாப்பாளர்கள் பலர் கடைசியில் கடன் தொல்லையினால் காணாமலேயே போய் விடுகிறார்கள்.
அடுத்ததாக இயக்குனர்களைப் பொறுத்தவரையில் சிலர் எந்தவித முன் அனுபவம் இல்லாமல் இந்த பீல்ட்டுக்கு வந்து விடுகிறார்கள்.
ராம் கோபால் வர்மா, மணிரத்தினம் போன்றவர்களைப் போல யாரிடமும் உதவி இயக்குனர்களாக பணி புரியாமலேயே வெற்றி பெற்று விடலாமென தப்புக் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்கிறார்கள்.

கடந்த 2009 ல் வெளியான படங்களில் ஏறக்குறைய நூறு படங்கள் வரை புதிய இயக்குனர்கள் மற்றும் தயாப்பாளர்களின் படங்களாகும்.
அனுபவின்மை, திட்டமிடாமை, விறுவிறுப்பற்ற கதை, திரைக்கதை போன்றவற்றினால் படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன.
முன்னர் நடிகர் ஜீவா, ராம், கற்றது தமிழ், ஈ போன்ற நல்ல படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

ஆனால் அவரே இன்று மசாலா பக்கம் பார்வையை செலுத்தக் காரணம் முன்னர் மாதி வித்தியாசமான கதையுடன் நல்ல இயக்குனர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மசாலா படங்கள் ஓரளவு வெற்றி பெறுகின்றன. வித்தியாசமான கதையென வரும் புதிய இயக்குனர்கள் கடைசியில் கதையை சிதைத்து விடுவதனால் படம் பப்படமாகி விடுகின்றது.சமீபத்தில் வெளியான விஜய் நடித்த “சுறா' சுருண்டு வெறும் “புறா' வாகி விட சூர்யா நடித்து வெளிவந்த “சிங்கம்' வசூலில் பங்கம் இல்லாமல் நல்ல வசூலுடன் ஓடக் காரணம், “விஜய்' யின் படத் தெரிவில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

சூர்யா மசாலா படத்தில் தோன்றி நடித்தாலும் கூட பாத்திரத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பதனால் தான் ஆதவனுக்குப் பின் சிங்கம் கம்பீரமாக கர்ச்சிக்கிறது. ஒரு நல்ல படத்தை எடுத்து விட்டால் மட்டும் போதாது. மக்களின் கவனத்துக்கு போகும் வண்ணம் விளம்பரம் செய்வதுடன் நல்ல திரையரங்குகளில் திரையிட வேண்டும்.“காதலில் விழுந்தேன்' நூறு நாட்கள் ஓடியமைக்கு இது தான் காரணம்.
ஆனால் அதற்காக தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற சுமாரான படங்களுக்கு என்னதான் விளம்பரம் செய்தாலும் அவை எடுபடாதென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாலா சங்குபிள்ளை
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல