சனி, 19 ஜூன், 2010

அமெரிக்காவில் 14 வருடங்களின் பின் முதல் தடவையாக துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை

அமெரிக்காவானது 14 வருடங்களுக்கு பின் முதல் தடவையாக படுகொலை குற்றவாளியொருவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றியது.


25 வருட காலமாக மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறைவாசம் அனு பவித்த ரோனி லீ கார்ட்னர் (49 வயது) என்பவருக்கே வியாழக்கிழமை நள்ளிரவு இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டுக்கு முன் தடை செய்யப் பட்ட துப்பாக்கியால் சுட்டு இந்த மரண தண்டனை நிறைவேற்றும் முறை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் இந்த வழிறையில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளான நான்காவது நபராக இவர் விளங்குகிறார்.

1984 ஆம் ஆண்டிலான படுகொலைக் குற்றச்சாட்டு ஒன்றுக்காக 1985 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, தப்பிக்கும் முயற்சியில் சட்டத்தரணியொருவரை படுகொலை செய்ததாக கார்ட்னர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் திரப்பர் புறநகர்ப் பகுதியிலுள்ள சிறைச்சாலையொன்றில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களால் துப்பாக்கியால் சுட்டு அவருக்கு மரணதண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல