வியாழன், 15 ஜூலை, 2010

உலகில் மிகவும் காரமான மிளகாய்

இங்கிலாந்து நாட்டில் ‘லிங்கன்ஷைர்’ என்ற இடத்தில் விளையும் மிளகாய் தான் உலகிலேயே அதிக காரமான மிளகாய் என்று கருதப்படுகிறது. இந்த மிளகாயை சாப்பிடுபவர்களின் வாய், மூக்கு எல்லாம் வெந்து போகும் அளவுக்கு இது காரமானது. இதை தின்றால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவேண்டியிருக்குமாம்.

இந்த மிளகாய் ரகத்துக்கு ‘இனிபினிட்டி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இனிபினிட்டி என்றால் முடிவு இல்லாதது என்று அர்த்தம். இதை தின்றால் ஏற்படும் வேதனைக்கு முடிவு கிடையாது என்பதால் தான் இதற்கு இப்படி பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதை சாப்பிடுவதால் ஏற்படும் வேதனையை பால் குடித்தோ, மாத்திரையை தின்றோ தணிக்க முடியாதாம்.

இதன் காரத்தை ஸ்கோவில்லே அளவுகோல்படி ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 286 என்று அளந்து இருக்கிறார்கள். போர்க் களங்களில் ஆயுதமாக பயன்படுத்தப்படும் மிளகு ஸ்பிரேயின் காரம் இந்த அளவுகோலின்படி 2 இலட்சம் ஆகும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல