ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

ஒரு வருடமாக கணவரை அடைத்து வைத்த பிரெஞ்சுப் பெண் கைது

A person passes the home where a woman had held her husband captive for a year


பாரீஸ் அருகே துணி துவைக்கும் அறையில் தனது 80 வயது கணவரை ஒரு ஆண்டாக அடைத்து வைத்திருந்த 45 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த செயலுக்கு அப்பெண்ணின் கள்ளக்காதலரும் உடந்தையாக இருந்துள்ளார்.
 
பாரீஸ் அருகே உள்ள அர்ரோ என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நகரைச் சேர்ந்த 80 வயது முதியவருக்கு 45 வயதில் மனைவி உள்ளார். கணவர் மிகவும் வயதானவராக இருந்ததால் மனைவி அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவருக்கு இன்னொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த வருடம் தனது கணவரை துணி துவைக்கும் அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டார். சிறை யில் கொடுப்பது போல சாப்பாடு மட்டும் கொடுத்து வந்துள்ளார். பின்னர் தனது கள்ளக்காதலருடன் விரும்பிய நேரத்திற்கு உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் பெரியவர் குறித்த தகவல் போலீஸாருக்குத் தெரிய வர விரைந்து வந்து அவரை மீட்டனர். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்தப் பெரியவருக்கு கண் சரியாகத் தெரியவில்லை. சரியான சாப்பாடு இல்லாமல் மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்டார்.உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அவருக்கு நினைவு நன்றாக இருப்பதாகவும், இருப்பினும் இன்னும் துயரத்திலிருந்து அவர் முழுமையாக மீளாததால், யாருடனும் பேசாமல் மெளனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ப்ரூனோ ஆர்வியஸ்ட் கூறுகையில், ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே இவருக்கு சாப்பாடு கொடுத்துள்ளார் அவரது மனைவி. அதுவும் கூட காலாவதியாகிப் போன ரொட்டிகளையே கொடுத்துள்ளார். இதனால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

கணவரை சிறை வைத்தது போல அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த அந்த மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல