இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள சூரி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக 8 கிலோ மீட்டர் தூரம் அழைத்து வரப்படுகிறார். ஆண்கள் அவரது உடலைத் தொட்டு மானபங்கப்படுத்துகின்றனர். சிறுவர்கள் அவர் மீது கல் வீசித் தாக்குகின்றனர்.
அந்தப் பெண் அழுது கொண்டே, இரு கைகளால் தன் அங்கங்களை மூடியபடி வருகிறார். அவர் நடக்க முடியாமல் தள்ளாடும் போதெல்லாம் பிரம்பால் அடிக்கின்றனர். அதைப் பார்த்துப் பெண்கள் உட்பட அனைவரும் கொட்டமடித்துச் சிரித்தவாறு உடன் வருகின்றனர்.
இந்தக் காட்சி 11 நிமிடம் ஓடுகிறது. வயல்வெளி மற்றும் தெருக்கள் வழியாக அவரை அழைத்து வருவது போன்றே காட்சி இருந்தது. 100 பேர் அவரை பின் தொடர்ந்து ஊர்வலமாக வருகின்றனர்.
முதலில் எந்த ஊரில் இந்தச் சம்பவம் நடக்கின்றது என்று யாருக்குமே தெரியாது. ஊடக நிருபர்கள் சிலரின் செல்போனிலும் இந்த வீடியோ காட்சி பதிவானது.
இதனைப் பார்த்த ஒருசில நல்ல உள்ளங்கள் மாவட்ட பொலிஸ் அதிகாரி கிமா யூன் ஹபிக், மாவட்ட ஆளுநர் சுமித்ரா ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்தன. இதுபற்றி அவர்கள் விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
வீடியோவில் உள்ள காட்சிகளை வைத்து அது எந்த ஊர் எனக் கண்டுபிடிக்கும் பணி நடந்தது. அதில் ராம்புத்காத் பகுதியில் உள்ள சில கிராமங்கள் தெரிந்தன.
அந்தக் கிராமங்களை நோக்கிப் பொலிசார் படையெடுத்தனர். விசாரணை நடத்தினர். அங்குள்ள ஓர் ஊரில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
நிர்வாண ஊர்வலம் நடத்தியதாக 5 பேரைக் கைது செய்தனர். ஆனாலும் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட பெண்ணை இன்னமும் அடையாளம் காணவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்கின்றது.
விசாரணையின் போது இது விவரம் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் 4 மாதங்களுக்கு முன் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காததால் விடயம் வெளியுலகத்திற்குத் தெரியாமலேயே மூடி மறைக்கப்பட்டிருக்கின்றது.
தீர்ப்பு வழங்கிய பஞ்சாயத்தாரும் பெண்ணை மானபங்கப்படுத்தியவர்களும் சட்டத்தின் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டால் சரிதான்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக