வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

லெபனானில் இலங்கை பணிப் பெண் மாடியிலிருந்து விழுந்து மரணம்?

லெபனான் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாகச் சேவையாற்றிக் கொண்டிருந்த அநுராபுரம் சிராவஸ்திபுர பகுதி குடும்பப் பெண்ணொருவர் மாடிக்கட்டிடமொன் றிலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளது பற்றி இலங்கையின் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தமக்கு அறிவித்துள்ளதாக இப் பெண்ணின் தாய் ஆர். ஏ. சரோஜினி தெரிவித்தார்.

ஏழைக் குடும்பப் பெண்ணான இவர் தமது இரு குழந்தைகளையும் வாழ வைப்பதற்கு போதிய வருமானமின்மை யால் பணிப் பெண்ணாகச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியையும் பெற்றே சென்றுள்ளார். மரணமடைந்தவர் ஜே. எம். கீர்த்திக்கா சாந்தினி (வயது 28) என்பவர் இரு குழந்தைகளின் தாயாவார்.

கடந்த 22 ம் திகதி இடம் பெற்ற இச் சம்பவத்தினை இவரது தோழியின் மூலமாக குடும்பத்தினர் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டுள்ளனர். மாடியிலிருந்து வயர் ஒன்றின் உதவியுடன் கீழே இறங்கும் போதே வீழ்ந்துள்ளதாக இவர் சேவை யாற்றிய வீட்டு உரிமையாளர் தகவல் வழங்கி யுள்ளார். இவரது மரணம் பற்றி சந்தேகம் எழுந்துள்ளதால் இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூரண விசாரணை ஒன்றை நடாத்தி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் எனவும் இப் பெண்ணின் தாயார் கேட்டுக் கொண்டார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல