பிரபாகரன் உயிரிழந்து விட்டதாகவும் இதனால் யுத்தம் முடிவடைந்து விட்டது என 2009 ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இராணுவத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தனர்.
மே 16 ஆம் திகதி அதிகாலை இராணுவ பாதுகாப்பு அரண்களை உடைத்துக்கொண்டு செல்லும் நோக்கில் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது, தீபற்றி எரிந்த அம்புலன்ஸ் வண்டியில் இருந்த சடலம் பிரபாகரனுடையது என படையினர் எண்ணியதே படையினர் யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவித்ததற்கு காரணமாகும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை நிராகரித்த கே.பி 17 ஆம் திகதி பிரபாகரன் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட புலனாய்வுத்துறையினர் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட செய்மதி தொலைபேசி உரையாடல் குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரபாகரனின் தொலைபேசி இருந்த இடத்தை கண்டறிந்தனர்.
இதன் பின்னரே பிரபாகரன் மறைந்திருந்தாக கூறப்படும் நந்திக்கடல் பகுதி மீது படையினர் தாக்குதல் நடத்தினர். செய்மதி தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டறியும் தொழிற்நுட்பம் அமெரிக்காவினால் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருப்பதை புலிகள் அறிந்திருக்கவில்லை. கே.பி, பிரபாகரனுடன் தனக்கு தொலைபேசி தொடர்பிருப்பதாக காட்டி தலைமைத்துவ பதவியை பெற முயற்சித்துள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக