வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கணவரை கூண்டுக்குள் அடைத்துவைத்த மனைவி

தனது கணவருக்கு மருத்துவம் செய்வதற்கு மருத்துவர்கள் மறுத்ததால் அவரை கூண்டொன்றுக்குள் அடைத்து வைக்க வேண்டிய நிலைக்கு மனைவி தள்ளப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

வு ஹான் (43 வயது) என்ற மேற்படி நபர் கார் விபத்தில் மூளையில் காயம் ஏற்பட்டதால் கடுமையான ஞாபகசக்தி இழப்பிற்கு ஆளானார்.

அவரால் எதையும் ஞாபகப்படுத்த முடியாதிருந்ததுடன் வீட்டை விட்டு செல்கையில் தனது வசிப்பிடம் எது என்பதையே மறந்து விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரது மனைவி மிங்மெயி, ஹானுக்கு ஞாபகசக்தியை தக்க வைப்பதற்கான மருந்துகளைப் பெற பணத்தை தண்ணீராக செலவழித்தார்.

எனினும் கிழக்கு சீனாவில் தாய்ஸொயு எனும் இடத்திலுள்ள உள்ளூர் மருத்துவ மனை தற்போது அவர் கேட்ட மருந்துகளை வழங்க மறுத்துள்ளது.

இதனையடுத்து, ஞாபகசக்தியை இழந்த தனது கணவர் வழிதவறி சென்றுவிடாமல் இருக்க அவரை மிங்மெயி கூண்டில் அடைத்து வைத்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல