சனி, 18 செப்டம்பர், 2010

கடத்தல் கும்பலுக்கு துணை போன கிளி கைது

கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல் அதிக அளவில் பெருகி வருவதால், அந்த கும்பலை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. பாரன்குயில்லா நகரில் ஒரு பங்களாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்து அங்கு விரைந்தனர்.

சுமார் 300 போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு திடீரென பறந்து வந்த கிளி வந்த வேகத்தில் "ஓடு... ஓடு.... உன்னை பிடிக்க பூனை வருகிறது" என கொஞ்சி கொஞ்சி பேசியதாம். இதை கேட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடத்தொடங்கி விட்டார்கள்.

இருந்தும் அவர்களில் சிலரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் வருவதை கண்காணிப்பதற்காகவே அந்த கிளியை வளர்த்து வருவதாகவும் அதற்கு “லொரன்ஸ்ஷோ” (Lorenzo) என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, அந்த கிளியையும் போலீசார் பிடித்தனர். அந்த கிளி விலங்குகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் கொலம்பிய நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல