புதன், 6 அக்டோபர், 2010

சினிமா பாணியில் இடம்பெற்ற 7 கோடி ரூபா கொள்ளை

வத்தளை தெலங்கபாத்தை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற ஏழு கோடி ரூபாய் கொள்ளைச் சம்பவமானது மிகவும் சூட்சுமமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட் டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைக ளும் தோன்றியிருப்பதுடன் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்க ளில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெலகபாத்தை பகுதியில் அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது தனியார் வங்கியொன்றின் தன்னியக்க பணம் பெறும் இயந்திரங்களான (ஏ.ரி.எம்.) இயந்திரங்களுக்கு பணம் இடுவதற்காக சென்ற வாகனத்தை வழிமறித்தே இக்கொள்ளை புரியப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச் செயல்களை புரிகின்றவர்களில் அனேகமானவர்கள் தங்க ளையறியாமலேயே அவ்விடங்களில் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்வர். அத னை கண்டறிவதே பொலிஸாரின் முதல் கட்ட வேலையாக இருக்கும். அந்த அடிப்ப டையில் பொலிஸார் இந்த விசாரணையினையும் முன்னெடுத்து வருகின்றனர்.

பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் தோற்றுவித்திருக்கும் சினிமா பா ணியிலான இக்கொள்ளைச் சம்பவத்தினை கண்டறிவதற்கென பொலிஸ் மாஅதிபரின் பணிப்பின் பேரில் ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கோ ணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு வங்கியொன்று அதன் ஏ.ரி.எம். இயந்திரங்களுக்கு பணத்தினை இடுவதற்காக நீர்கொழும்பிலிருந்து அதன் பயணத்தினை ஆரம் பித்துள்ளது. லொறி வடிவிலான கெப் வண்டியில் ஏழு கோடி ரூபாய் பணத்துடன் வாகனத்தில் ஐவர் வந்துள்ளனர். இரு வங்கி உத்தியோகஸ்தர்கள் இரு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் சாரதி ஆகியோரே இந்த ஐவர்.

வாகனத்தில் பணம் வைத்திருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தின் திறப்பு ஒரு வங்கி அதிகாரியிடமும் மற்றொரு வங்கி அதிகாரியிடம் ஏ.ரி.எம். இயந்திரங்களின் திறப்பும் இருந்துள்ளது. இவ்வாறு நீர்கொழும்பிலிருந்து வத்தளை வந்தவர்கள் வத்தளையில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணத்தினை இட்டுவிட்டு கண்டி வீதியில் புளூகா சந்தி யில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்திற்கு பணத்தினை இடுவதற்காக தயாராகின்றனர்.

வத்தளையில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் இட்டதன் பின்னர் 6 கோடியே 90 இலட்சம் ரூபாய் பணத்துடன் கண்டி வீதியில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தை நோக்கி செல்வதே இவர்களது அடுத்த இலக்கு. அதற்காக அவர்கள் தெரிவு செய்த வழியே தெலங்கபாத்தை வனவாசல வீதியாகும்.

உண்மையில் தெலங்கபாத்தை வனவாசல வீதியினூடாக செல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை. ஆனால் வாகனத்தின் சாரதி வத்தளை தெலங்கபாத பகுதியை சேர்ந்தவர் என்பதாலும் குறுக்கு வீதிகள் தொடர்பில் நன்றாக பரிச்சயம் உள்ளவர் என்பதாலும் அந்த வீதி தெரிவு செய்யப்படுகிறது.

அதாவது தெலங்கபாத்தை வீதியினூடாக வனவாசலவிற்குச் சென்று அதனூடாக தொரண சந்திக்கு செல்வதே சாரதியின் நோக்கமாக இருந்துள்ளது. அப்படியே வத் தளை கெனுபெலஸ் சந்தியிலிருந்து கண்டி வீதி புளுகஹா சந்தியில் உள்ள ஏ.ரி. எம். இயந்திரத்தை நோக்கி தெலங்கபாத்தையினூடாக வாகனம் வேகமாக விரைகிறது.

தெலங்கபாத்தை வீதி வாகனங்களின்றி வெறிச்சோடி இருந்ததால் சாரதி கிலோ மீற்றருக்கு 80 தொடக்கம் 90 என்ற வேகத்தில் வாகனத்தை செலுத்தியுள்ளார். வாக னம் காற்றாய் பறந்தது. அதிகாலை ஒரு மணியளவில் தெலகபாத்தை மங் சந்திக்கு சற்று முன்னால் பொலிஸ் சீருடையை ஒத்த ஒருவரும் கிராம பாதுகாப்பு படையி னரின் உடையை ஒத்த உடையணிந்த ஒருவரும் நின்று வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியவர்கள் பொலிஸார் என கருதிய சாரதி செய்வதறியாது வாகனத்தை நிறுத்தியுள்ளார். வாகனத்தை நிறுத்திய உடனேயே மேலும் மூவர் சிவில் உடையில் வாகனத்தின் அருகே வந்ததை சாரதி கண்டுள்ளார்.
வாகனத்தை நிறுத்திய சில நொடிகளில் என்ன நடந்தது என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையென சொல்லப்படுகிறது.

வாகனம் நிறுத்தப்பட்ட சில நொடிகளில் 56 ரக துப்பாக்கியுடன் சிவில் உடையில் இருந்த இளைஞர் ஒருவர் வாகனத்திலிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் அருகில் சென்று கழுத்தில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியதோடு தாம் சொல்வதை கேட்குமாறும் துப்பாக்கியை கீழே போடுமாறும் சினிமா பாணியில் கூறியுள்ளனர். அதே நேரத்தில் மறுபுறத்தில் இருந்த சாரதியின் கழுத்தில் ஒருவர் கூரிய கத்தியை வைத்து கழுத்தை வெட்டுமுன் கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.

அந்த இக்கட்டான நிலையில் கொள்ளையர்களின் கோரிக்கைகளுக்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழியில்லாமல் வாகனத்தில் இருந்தவர்கள் கொள்ளையர்களின் கட் டளைகளுக்கு செவி சாய்த்துள்ளனர்.
அதன் பின்னர் கொள்ளையர்கள் வாகனத்திலிருந்த 6 கோடியே 90 இலட்சம் ரூபாவி னையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் துப்பாக்கிகளையும் எடுத்துக்கொண்டு தப் பிச் சென்றுள்ளனர்.

அதிகாலை ஒரு மணிக்கும் ஒன்றரை மணிக்கும் இடையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகே பேலியகொடை பொலிஸில் சம்பவம் தொடர்பான முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் தோன்றியுள்ளன. ஆகையினாலேயே அக்கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரிகளை கண்டறிவதற்காக ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கோ ணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வங்கியின் வாகனத்தில் வந்த ஐவரையும் பொலிஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
இருந்த போதும் இதுவரையிலும் சம்பவம் தொடர்பில் சரியான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லையென விசாரணைக் குழு தெரிவிக்கின்றது.

சாதாரணமாக வங்கியொன்றின் இவ்வாறான செயற்பாடுகள் வெளியில் தெரிவதற் கான சாத்தியக்கூறுகளே இல்லை. அவ்வாறு தெரியவருவதானால் அது வங்கியின் இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களிடமிருந்தே வெளியாகியிருக்க வேண்டுமென விசாரணைக் குழுவின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எது எப்படியோ இந்த கொள்ளைச் சம்பவம் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அதை மிகவும் சூட்சுமமான முறையிலேயே அனுகிக் கண்டறிய வேண்டும்.

அதற்கான பல்வேறு வழிமுறைகளை தாம் கையாண்டு வருகின்றோம். அதனூடாக நிச்சயமாக சந்தேக நபர்களை கைது செய்ய முடியும். சக்விதிரணசிங்க போன்ற வர்களை கைது செய்ததை போல இவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

இந்த வங்கிக் கொள்ளைத் தொடர்பான பல்வேறு தகவல்களை விசாரணைக் குழு பெற்றுள்ளது. அது சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு பாதக மாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக வெளியிட முடியாதுள்ளது எனவும் அந்த அதிகாரி தெரிவிக்கின்றார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசா ரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பொது மக்களின் உதவிகளையும் நாடியுள்ளனர்.

இதனடிப்படையில் பார்க்கின்ற போது வெகு விரைவில் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றே நம்பத்தோன்றுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டு மறைந்து வாழ்ந்த சக்விதி ரணசிங்கவை கைது செய்வதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு உதவி புரிந்தனர்.
அதே போன்று இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான சூத்திரதாகளை கைது செய் வதற்கும் பொது மக்கள் தமது பங்களிப்பை செய்வார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம். நேசமணி


வீரகேசரி

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல