ஞாயிறு, 19 டிசம்பர், 2010

பிரதீபா பட்டேல் பிறந்த நாள்

இந்தியாவின் 12ஆவது குடியரசு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் டிசம்பர் 19, 1934ல் பிறந்தார். இவர் பரவலாக பிரதிபா தாயி, என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் இவர் என்பது விசேட அம்சமாகும்.

அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவர் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஆவார். ஜூலை 19, 2007இல் நடந்த குடியாராசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பைரன் சிங்க் ஷெகாவத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் பிரதிபா பட்டேல் பிறந்தார். அவரின் தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். ஜல்கானில் உள்ள எம். ஜே. கல்லூரியில் முதுகலைமாணி பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று வக்கீலாகவும் பயிற்சி பெற்றார்.

மகாராஷ்டிரா மாநில அவையில் உறுப்பினராக 1962 முதல் 1985 வரை இருந்தவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரையில் இருந்தவர். 2004 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக பணியாற்றுகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல