இந்தியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியினால் இவை விநியோகிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 16 வருடங்களின் பின்னர் அவர்களுக்கான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி தமிழகத்தின் விருதுநகரில் உள்ள வேம்புகோட்டை அகதி முகாதமின் அகதிகளுக்கு நேற்றைய தினம் பிற்ப்பு சான்றிதி;கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசாங்கமும், இலங்கை உயர்ஸ்தானிகரகமும் இணைந்து ஈழ அதிகள் பேரவையின் ஏற்பாட்டில் நடத்திய நடமாடும் சேவை ஒன்றின் போது இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது சுமார் 238 சிறுவர்களுக்கான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை மதுரையில் இடம்பெற்ற இவ்வாறான நடமாடும் சேவை ஒன்றின் போது, 251 பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை எஞ்சியுள்ள முகாம்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகள் நடத்தி, எதிர்வரும் காலங்களில் பிறப்பு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேலு கிருஷ்ணமூர்தி தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக