திங்கள், 27 டிசம்பர், 2010

இன்டர்நெட் பார்த்து வீட்டிலே பிரசவம்

வீட்டை விட்டு வெளியேற முடியாத கடும் பனிப் பொழிவால், இங்கிலாந்தில் ஒருவர் இன்டர்நெட் மூலம் பிரசவ டிப்ஸ்களை அளித்து காதலியை பிரசவிக்கச் செய்தார்.

இங்கிலாந்தின் மெர்சிசைட் பகுதியின் சவுத்போர்ட் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் கார்பீல்டு. இவரது காதலி ஜென்னி. சேர்ந்து வாழ்கின்றனர். ஜென்னி நிறைமாத கர்ப்பமாக இருந்தார். நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல முயன்றனர்.

ஆனால், வீட்டின் கதவை திறக்க முடியாத அளவுக்கு பனி கொட்டிக் கிடந்தது.

தாமதிக்க விரும்பாத கிறிஸ், தனது ஐபோனில் இன்டர்நெட்டை தொடர்பு கொண்டார். பாதுகாப்பாக பிரசவிப்பது எப்படி என வெப்சைட்களில் தேடினார். அவற்றை படித்துக் காட்டினார்.

அதன்படி, ஜென்னி பெண் குழந்தையை வீட்டிலேயே தானாக பெற்றெடுத்தார். இதுபற்றி கிறிஸ் கார்பீல்டு கூறுகையில், ‘‘வீட்டை விட்டு வெளியேற முடியாத மோசமான வானிலை. என்ன செய்வதென்று திகைத்தேன். உடனே, இன்டர்நெட் நினைவுக்கு வந்தது. அதை தொடர்பு கொண்டதும் எல்லாமே விரைவாக நடந்து முடிந்தது. எல்லாரும் எங்களை பாராட்டுகின்றனர்’’ என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல