சுமார் 17 வருடங்களாக சவுதி அரேபியாவில் ஊதியம் ஒன்றும் வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்ணாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
1994ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற குசுமா நந்தினி என்ற 56 வயதுடையப் பெண்ணே இவ்வாறு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தவராவார்.
இலங்கையில் உள்ள குசுமா நந்தினியின் உறவினர்களுடன் உரையாட தொலைபேசி அழைப்பு வசதிகள் கூட செய்து கொடுத்திருக்கப்படவில்லை என்பதுடன் சுமார் 15 வருடங்களாக இவருக்கு ஊதியமும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
15 வருடங்கள் வீட்டினுல் பூட்டி வைத்திருந்து குசுமா நந்தினியிடம் வேலைப் பெறப்பட்டதுடன், பின்னர் குறித்த வீட்டு உரிமையாளர் அவருடைய உறவினர் வீட்டிற்குப் பணிப்பெண்ணாக இவரை அனுப்பியுள்ளார்.
சவுதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் பணிப்பெண் சித்திரவதைகளில் இது பாராதூரமான ஒன்றென சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
குசுமா நந்தினி இலங்கை தூதரக அதிகாரிகளைச் சந்தித்தபோது அவர் இலங்கையையும் தனது உறவினர்களையும் மறந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தான் இலங்கையில் இருந்து சவுதிக்கு வேலைக்குச் செல்ல புறப்பட்ட போது தனது மகளுக்கு 8 வயதும், மகனுக்கு 6 வயது எனவும், கணவருக்கு சரியாக தொழில் கிடைக்காமையால் பிள்ளைகளின் கல்வி நலனுக்கு பணம் அனுப்ப வெளிநாட்டு வேலைக்காக வந்ததாகவிம் குசுமா நந்தினி தெரிவித்துள்ளார்.
17 வருடங்களாக சூரிய ஒளியைக் கூட தான் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர் கண்ணில் காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக