தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின் போது மிக முக்கிய பிரமுகர்கள் மீது தமிழீழ விடு தலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவுகள் தமிழ் நாடு பொலிஸாரை எச்சரித்துள்ளதாக ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. அத்துடன் இத் தகவலை இந்தியாவின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் உறுதிப் படுத்தியிருப்பதாகவும் அப் பத்திரிகை குறிப் பிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தைச் சேர்ந்த பலர் தமிழ்நாட்டுக்கு வந்து மறை வான இடமொன்றில் பயிற்சி பெற்று வருவ தாகவும் மத்திய உள்துறை அமைச்சு நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஹிந்து பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தமது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களைச் சேகரிக்கும் முயற்சியில்ஈடு பட்டுள்ளதாகவும் அந்த எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது உறுப்பினர்கள் பலர் சென்னை வள சரவாக்கத்தில் தங்கியுள்ளதாக இலங்கை படைத்தரப்பின் தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப் புலிகள் கூறியுள்ளதுடன், விடுத லைப் புலிகளின் நிதி மற்றும் வான்படைப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் தமிழ்நாட்டுக்குள் அகதிகள் என்ற பெயரில் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.
அதேவேளை தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அணிதிரள் வதற்கான வாய்ப்புகள் இல்லை என இது குறித் துத் தகவல் வெளியிட்ட தமிழ்நாடு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகவும் இப் பத்திரிகை குறிப்பிடுகின்றது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் அவுஸ்திரேலியாவுக்கும்,கனடாவுக்கும் படகு கள் மூலம் சட்டவிரோதமாக ஆட்களை அனுப்ப முனைவது பற்றிய தகவல்கள் சிலவே தமக் குக் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் தமிழ்நாடு பொலிஸ் இயக்குனர் லத்திகா சரணும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலி களின் நடமாட்டம் இல்லை எனத் தெரிவித் துள்ளதாக ஹிந்து பத்திரிகை மேலும் தெரி வித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக