ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

தண்டனையால் சுயநினைவு இழந்த இலங்கைக் காமச் சாமியார் பிரேமானந்தா!

திருச்சி ஆசிரமத்தில் நடந்த கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் இலங்கையரான பிரேமானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் சுயநினைவு இழந்த நிலையில் உள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. அவரது ஆசிரமத்தில் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட பலர் வந்து தியானம் செய்து வந்தனர். அந்த ஆசிரமத்தில் முறைகேடு நடப்பதாக அங்கிருந்து தப்பியவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையில் ஆசிரமத்தில் கொலை மற்றும் பெண் பக்தர்களிடம் பாலியல் பலாத்காரம் நடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக பிரேமானந்தாவை பொலிஸார் கைது செய்தனர். ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடலூரில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் இதய நோய் இருப்பதாக அவர் சமீபத்தில் பிணையில் வெளியே வந்தார்.

அவர் ஏற்கனவே ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்ததால், அவரது உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பின்னர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே கடலூர் சிறையில் இருந்த பிரேமானந்தாவின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலைமை கவலைக்கிடமானதும், அவர் சென்னை புழல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5.15 மணிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேமானந்தாவுக்கு தற்போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. பிரேமானந்தா உடல்நிலை குறித்து மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மோகன்ராவ் கூறியதாவது:

பிரேமானந்தா கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.15 மணிக்கு இங்கு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதித்ததில் அவர் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதோடு, மஞ்சள்காமாலை நோயும் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த 6 மாதத்திற்கு முன் பிரேமானந்தா சாமியாருக்கு பித்தப்பையினை வைத்தியர்கள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர். நோயின் தாக்குதல் அதிகமாகி இருப்பதால் பிரேமானந்தா சாமியார் கொஞ்சம், கொஞ்சமாக சுயநினைவை இழந்து வருகிறார். ஆனால் பிரேமானந்தாவிற்கு நாடி துடிப்பு மற்றும் ரத்தம் அழுத்தம் சீராக உள்ளது.

அவரது குடல் மற்றும் கல்லீரல் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு மாற்று கல்லீரல் சத்திரசிகிச்சை செய்வதற்கு அவரது உடல் நிலை ஏற்றதாக இருக்கிறதா? என ஸ்டான்லி மருத்துவமனை குடல் மற்றும் கல்லீரல் பிரிவுக்கு சிபாரிசு செய்துள்ளோம். அவர்கள் அவரின் உடல் நிலையை ஆய்வு செய்து இதில் முடிவு எடுப்பார்கள். அவரது உடல்நிலையை வைத்தியர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல