சனி, 3 மார்ச், 2012

உருளைக் கிழங்கு ஆம்லெட்

தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு-350 கிராம்
முட்டை-6
சோயா சோஸ்-3 தே.க
நல்லெண்ணெய்-1 தே.க
மிளகு -1 தே.க
மிளகாய்த்தூள்-1 தே.க
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
பூண்டு-2 பல்
உப்பு தேவையான அளவு
எண்ணெய்

செய்முறை:

உருளைக் கிழங்கை 3/4 பதத்திற்கு அவித்து, தோலை உரித்து வட்டமாக வெட்டவும்.

வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி,சோயா சோஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுதூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெட்டிய உருளைக் கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக் கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட்டாக பொரித்து எடுக்கவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல