வியாழன், 8 மார்ச், 2012

வைகோவின் தோளில் ஏன் கருப்புத் துண்டு தொங்குகிறது ?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீளமான கருப்புத் துண்டு அணிவதின் பின்னணியில் அவரது கட்சிக்காரர் ஒருவர் இருக்கிறார்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என்றால் மக்கள் நினைவுக்கு வருவது கருப்பு கூலிங் கிளாஸ், புஷ் குல்லா, குட்டை துண்டு மற்றும் வலது கையில் கடிகாரம்.


திமுக தலைவர் கருணாநிதிக்கு அடையாளம் கருப்பு கண்ணாடியும், லேட்டஸ்டாக வந்து சேர்ந்த மஞ்சள் நிற துண்டும். அதே போன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அடையாளம் கருப்பு துண்டு, அதிலும் நீளமான கருப்புத் துண்டு.

அதை பேசும்போது படு லாவகமாக அங்கும் இங்கும் அவர் இழுத்து விட்டுக்
கொள்ளும் ஸ்டைலே தனி. முதலில் வைகோ குட்டை துண்டு தான் அணிந்து வந்தார். அதன் பிறகு அவரை நீளமான கருப்புத் துண்டு அணியச் செய்தவர் சங்கரன்கோவில் மதிமுக நகரச் செயலாளர் வாணிபிச்சையா.

இப்போது 76 வயதாகும் வாணி பிச்சையா இதுகுறித்து கூறுகையில்,
கடந்த 1986ம் ஆண்டில் எனது மகள் வாணிக்கு திருமணம் நடந்தது. அந்த
திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தவர் வைகோ. அவரிடம்
கொடுப்பதற்காக நீளமான கருப்புத் துண்டு ஒன்றை வாங்கி வைத்தேன். அதில்
கட்சியின் நிறத்தைக் குறிக்கும் வகையில் துண்டின் பார்டரில் சிவப்பு நிறத்தில்
எம்ப்ராய்டரி செய்தேன். அந்த துண்டை வைகோவிடம் கொடுத்து நீங்கள் இனி
நீளமான துண்டு தான் அணிய வேண்டும் என்று அன்பு கோரிக்கை விடுத்தேன்.

அவர் என் கோரிக்கையை ஏற்று இந்நாள் வரை கருப்புத் துண்டு அணிந்து
வருகிறார். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தற்போது
சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்து வரும் வைகோ ஒவ்வொரு கூட்டத்திலும் தனது கருப்புத் துண்டுக்கு பின் இருக்கும் கதையை தவறாமல் கூறி வருகிறார் என்றார்.

அரசியலில் எத்தனையோ 'புயல்களை பூகம்பங்களை' சந்தித்தபோதும் இந்த 'புரட்சிப் புயல்' கருப்புத் துண்டை மட்டும் நழுவ விடாமல் கம்பீரமாக நடை போட்டுவது வருவது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல