திங்கள், 26 மார்ச், 2012

சொல் குழப்பம் தீர்க்க உதவும் இணையதளம்

ஆங்கில மொழியில் ஏறத்தாழ ஒரே மாதியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் புழக்கத்தில் உள்ளன. எடுத்துக் காட்டாக Capital / Capitol, Affect / Effect, new / anew, practice / practise, soure / sore, side / aside, warrenty / guarantee, affluent / effluent, suit / suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களுக்கான பொருள் வேறுபாடு மற்றும் எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரிந்தால் மட்டுமே, நாம் பயன்படுத்தும் ஆங்கிலம் பொருள் பொதிந்ததாக இருக்கும்.
இதற்கு நமக்கு வழி காட்டும் வகையில் ஓர் இணையதளம் இயங்குகிறது.



இந்த தளத்தின் முகவரி http://www.confusingwords.com.


இந்த தளத்தில் நுழைந்தவுடன் நமக்குச் சந்தேகம் எழும் சொல்லை டைப் செய்து அருகே உள்ள Find பட்டன் அழுத்தினால், அதற்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த சொல்லுடன் தொடர்புடைய, இந்த சொல் சார்ந்து குழப்பக் கூடிய சொல்லின் பொருளும் தரப்படுகிறது.

இதில் 3,210 சொற்களுக்கான விளக்கங்கள் உள்ளன. நமக்கு சந்தேகம் உள்ள சொல்லை, கொடுக்கப்படும் கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தால், கீழாக, விரிவாகப் பொருள் தரப்படுகிறது.

சொல்லை எப்படி வாக்கியத்தில் பயன் படுத்தலாம் என்று விளக்கம் தரப்படுகிறது. அந்த சொல்லை எத்தனை பேர் சந்தேகத்துடன் எடுத்துப் பார்த்தனர் என்ற எண்ணிக்கை தரப்படுகிறது.

சொற்களுக்கான எழுத்துக்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றால், ?/* கொடுத்து சொல்லை அமைக்கலாம்.

எடுத்துக்காட்டாக, "man" என்ற சொல்லின் எழுத்துக்கள் நினைவில் சரியாக இல்லை எனில், "m?n" or "??n" or "ma?" or "m*".என அமைத்துத் தேடலாம். m என்ற எழுத்தில் தொடங்கும் அனைத்து சொற்களும் பெற "m???" என டைப் செய்திடலாம். இந்த தளத்தில் உள்ள அனைத்து சொற்களின் பட்டியல் கிடைக்க * டைப் செய்து Find அழுத்தினால், அனைத்து சொற்களும் கிடைக்கின்றன. ஆங்கில மொழியினை எந்த தயக்கமும், சந்தேகமும் இன்றிப் பயன் படுத்த இந்த தளம் நமக்கு நன்கு உதவுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல