மனிதனுக்கு நன்றியுள்ள, உற்றநண்பனாக நாய் விளங்குகிறது. இதனால் வீடுகளில் செல்லப்பிராணியான இந்த நாய்களை வளர்ப்பதை உலகம் முழுவதும் வாழும் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இந்த செல்லப்பிராணிகளுக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் நிïயார்க் நகரில் `டி பெட் ஓட்டல்' என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி ஒன்றை விரைவில் திறக்க இருக்கிறார்கள்.
இந்த ஓட்டல் அறையில் இருவர் தங்கும் படுக்கை போடப்பட்டு சொகுசான மெத்தையும், அதனை சுற்றி ஏராளமான தலையணைகள் மற்றும் பெரிய தொலைக்காட்சி பெட்டி ஆகியவை இருக்கும். திறமையான சமையல்காரர் மூலம் தயாரிக்கப்படும் உணவு வழங்கப்படும். இத்துடன் உடற்பயிற்சி செய்ய `பிட்னஸ் சென்டர்' வசதியும் உண்டு. ஆனால் வாடகை கட்டணம் எவ்வளவு என்று கேட்டால் நமக்கு தலைச்சுற்று வரலாம். ஒரு நாள் தங்குவதற்கு ரூ.10 ஆயிரம் (200 டாலர்) கட்டணம் என நிர்ணயித்து இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக