புதன், 22 ஆகஸ்ட், 2012

'ஈழம்’ என்பது பிரபாகரனின் கண்டுபிடிப்பு அல்ல!

கருணாநிதி நடத்திய மாநாட்டில் வேண்டுமானால் 'ஈழம்’ என்ற சொல்லைத் தடை செய்யலாம். ஆனால், கல்வெட்டுகளில் இருப்பதை எந்த உத்தரவுகளால் என்ன செய்ய முடியும்?


அநுராதபுரத்தில் கண்​டெடுக்​கப்​பட்ட ஒரு கல்வெட்டு கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வணிகம் செய்ய வந்தவர்களுக்கு மண்டபம் அமைத்துக் கொடுத்த செய்தியைச் சொல்கிறது அந்தக் கல்வெட்டு. தமிழ் வணிகரை, 'தமேட’ என்றும் ஈழத்தில் இருந்தவரை 'ஈழ’ என்றும் அதில் குறிப்பு உள்ளது.

சிங்களரின் வேதப் புத்தகமாகச் சொல்லப்படும் 'மகாவம்சம் என்ற நூலில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னன் பெயர் 'ஈழ நாக’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'ராஜவலிய’ என்ற சிங்கள நூலில் இம்மன்னன் பெயரை 'எலுன்நாக’ என்று கூறியுள்ளார்கள். 'ஈழ’ என்பதும் 'எலு’ என்பதும் ஒன்றிலிருந்து ஒன்று மருவிய சொற்கள்.

எனவே, 'ஈழம்’ என்பது பிரபாகரனின் கண்டுபிடிப்பு அல்ல. பண்டைய முகவரி!

தனித் தமிழ்நாடு விடுதலைப் படை என்று யாராவது உருவாக்கினால், அதைத்தடுக்கும் ஒரே நோக்கத்துக்காக இனி தமிழ்நாடு என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்தால் எவ்வளவு அபத்தமோ, அத்தனை அபத்தம் இது!


ஜூனியர் விகடன் இவ்வார இதழில் வெளியான கழுகார் பதில்கள் பகுதியில் வாசகர் ஒருவர் தொடுத்த ஈழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாதா? என்ற வினாவுக்கு மேற்கண்டவாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல