1986 இல் புதுவையின் வீட்டில் அவரது மனைவி எனக்கும் மல்லிகை ஆசிரியருக்கும் பகற்போசன விருந்தளித்தவர். நாம் குடும்ப நண்பர்களாக பழகியவர்கள். அதனால் புதுவை குறித்து நான் அதிகம் கவலைப்பட்டதற்கு காரணங்கள் பல இருந்தன.
புதுவை போரின்போது சரணடைந்திருந்தாலும் அவரது மனைவி ரஞ்சினியும் மகன்மாரும் அகதிகள் முகாமிலிருக்கும் தகவல் கிடைத்தது. பலரும் அடுத்தடுத்து வெளியேறி தமது வாழ்விடங்களுக்கும் இடம்பெயர்ந்து வௌவேறிடங்களுக்கும் சென்றுகொண்டிருந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து நண்பர் ஜெயமோகன் எதிர்பாராதவிதமாக எனக்கு இலக்கியவாதியும் வெளிச்சம் ஆசிரியருமான கருணாகரனின் தொலைபேசி இலக்கம் தந்தார்.
நெஞ்சத்தை கிள்ளாதே, முள்ளும் மலரும், உட்பட சில நல்ல திரைப்படங்களை இயக்கிய மகேந்திரன், மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் வன்னியில் தலைவரை சந்திக்கச்சென்றவேளையில் கருணாகரனையும் இவர்கள் சந்தித்துப் பேசியதாக ஒரு தகவலும் உண்டு. மகேந்திரன் வன்னியில் எடுத்த ஒரு குறும்படத்தில் கருணாகரனின் மகனும் நடித்திருக்கிறார். மகேந்திரன் வன்னியில் இருந்த காலத்தில் எழுதிய ;நடிப்பு என்பது’, திரைக்கதை என்பது என்ற இரண்டு நூல்களை கருணாகரனே வெளியிட்டுமிருந்தார்.
கருணாகரனுடன் அவர் தங்கியிருந்த கொடிகாமத்திலிருந்து சுன்னாகத்திற்கு இடம் மாறிச் செல்லும் வரையில் அவருடன் தொலைபேசி தொடர்பில் இருந்தேன். அதன் பிறகு, 2010 இல் யாழ்ப்பாணம் சென்று அவரை சந்தித்து தற்போதும் தொடர்பிலிருக்கின்றேன்.
வவுனியா பி.பி.ஸி செய்தியாளர் மாணிக்கவாசகருடன் தொடர்புகொண்டு வவுனியா அரச அதிபரிடம் பேசி புதுவையின் குடும்பத்தினரை முகாமிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரினேன். ஆனால் சில விடயங்கள் எமது சக்திக்கு அப்பாற்பட்டவைதான்.
இந்நிலையில் சில மாதங்களில் எதிர்பாராதவிதமாக புதுவையின் குடும்பத்தினர் இடைத்தங்கல் முகாமிலிருந்து வெளியே வந்தனர். ரஞ்சியுடன் உரையாடினேன். இலங்கை வந்ததும் சந்திக்கின்றேன் எனச்சொன்னேன்.
புதுவையை விடுவிக்கவேண்டும் என்று விக்கிரமசிங்காவிடம் தொலைபேசி ஊடாக அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தேன்.
அவர் எனக்கு ஆறுதல் சொல்லும்போது முக்கியமான தகவல் ஒன்றையும் சொன்னார்,
இலங்கையில் ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவிடம் புதுவை பற்றி பேராசிரியர் சிவத்தம்பி பிரஸ்தாபித்திருப்பதாக அந்தத் தகவல் சொன்னது. இலங்கைக்கு 2010 ஆரம்பத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கு கொழும்பு சென்றபோது பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்து “ புதுவை தொடர்பாக பஸிலுடன் பேசினீர்களா..?” எனக்கேட்டேன். ஆனால் அவர் அதற்கு திருப்தியான பதில் தரவில்லை.
பஸிலுடன் தனக்கிருக்கும் நட்பும் உறவும் வெளி உலகிற்கு தெரிந்தால் வெளிநாடுகளிலிருக்கும் தமிழ்த்தேசியவாதிகளிடமிருந்தும் புலித்தேசியவாதிகளிடமிருந்தும் தனக்கு அழுத்தங்கள் வந்துவிடும் என்று அவர் தயங்கியிருக்கலாம். அவர் என்னைப்போன்று புதுவையை நேசித்தவர். புதுவையின் புலுனிக்குஞ்சுகளும் பூவரசம் வேலியும் நூலுக்கு விரிவான முன்னுரை எழுதியவர். அந்த முன்னுரை ஊடகங்களில் மறுபிரசுரமாகி பிரபல்யம் பெற்றது.
புதுவையின் விடுதலைபற்றி பேராசிரியர் பஸிலுடன் பேசியிருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
பேச்சுவார்த்தைகள் எவருக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தருமெனில் எவருடனும் பேசலாம். இந்த 21 ஆம் நூற்றாண்டில் பேச்சுவார்த்தைகளைக்கூட கொச்சைப்படுத்தி நாகரீகமற்ற வார்த்தைகளை ஊடகங்களில் எழுதிக்கொண்டிருப்பவர்களை காலம் மன்னிக்கட்டும்.
ஆனால் அன்று புதுவை தொடர்பாக பேராசிரியர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது எனக்குத்தெரியாது. கொழும்பில் மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முடிந்ததும் புதுவையின் குடும்பத்தினரைச்சென்று பார்க்கவிருக்கிறேன் என்று அவரிடம் சொன்னபோது, எனது கைபற்றி, “ ஓமடா... கட்டாயம் போய்ப்பார். வந்து எனக்கு தகவல் சொல்லு.” என்றார்.
(முக்கிய குறிப்பு:- பேராசிரியர் மறைந்தபோது பஸில்ராஜபக்ஷ அவர்கள் நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தார்)
2010 இல் இலங்கை செல்லுமுன்னர் புதுவையின் தாயார் யாழ்ப்பாணத்தில் காலமான தகவல் புதுவையின் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தது. அந்த அம்மா குழாய்நீர் தொட்டி அருகே விழுந்து மயக்கமுற்று மறைந்திருக்கிறார். தாயின் இறுதிச்சடங்கிற்கும் புதுவை இல்லை.
பெற்றெடுத்துப்பேணிப் பேரிட்டு, எத்தனையோ கற்பனைகள் செய்தென்னைக்
கவிபாடித்தாலாட்டி மெத்தையிலே வைத்தமுதமுலை தந்து வளர்த்தவளே...
முத்தத்தாலெந்தனது முகம் சிவக்கச்செய்தவளே.....
என்று தொடங்கும் அவரது ‘அன்னைக்கு இன்னுமொரு கடிதம்’ என்ற நீண்ட கவிதை இன்றும் எங்களிடம் இருக்கிறது.
சந்தமும் ஓசையும் கருத்தாழமும் அவரது கவிதைகளில் தனிச்சிறப்பு. அவரது தாயாரின் மறைவுச்செய்தி அறிந்தவுடனேயே கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இருக்கும் புதுவையின் நண்பர்களுக்கு தகவல் சொன்னதுடன், யாழ்ப்பாணத்திலிருப்பவர்கள் மரணச்சடங்கிற்கு செல்லுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தேன்.
“ நாம் இலங்கையிலிருக்கின்றோம். நாம் அறியாத தகவல்கள் உனக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்துவிடுகின்றன...?’ என்று சிலர் கேட்டனர்.
“அதற்கு அங்கு வந்து பதில் சொல்கிறேன். முதலில் மரணச்சடங்கிற்குச்செல்லுங்கள். அத்துடன் அவ்வப்போது புதுவையின் குடும்பத்தினரை சென்று பாருங்கள்.” என்று சொன்னேன்.
எத்தனைபேர் சென்றார்கள்? எத்தனைபேர் தயங்கினார்கள்? என்பது எனக்குத்தெரியாது.
2010 ஜனவரியில் முதல் தடவையாக கருணாகரனை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்து நண்பர் நடேசனுக்கு அவரை அறிமுகப்படுத்தினேன். புதுவையின் இனிய நண்பரும் மல்லிகை இதழ் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானபோது அதற்கு நீண்டகாலமாக அச்சுக்கோப்பாளராக பணியிலிருந்தவருமான சந்திரசேகரம் அண்ணரை நான் பார்க்கவிரும்பியபோது அழைத்துச்சென்றவர் கருணாகரன்.
சந்திரசேகரன் அண்ணரும் புதுவை பற்றியே கேட்டுத்தெரிந்துகொள்ளவிரும்பினார். புதுவை எங்கிருந்தாலும் வாழவேண்டும் என்று கண்கள் பனிக்க அவர் சொன்னபோது, அவரது பிரார்த்தனையும் புதுவையின் விடுதலை பற்றியதாகத்தான் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
அவரிடமிருந்து விடைபெறும்போதும், புதுவையின் குடும்பத்தினரை பார்க்கப்போகிறேன் என்றுசொன்னேன். அவரது முகம் மலர்ந்தது.
ஒரு நாள் புதுவையின் குடும்பத்தினர் வசிக்கும் ஊருக்குச் சென்றேன். இரவு நேரமாகையால் வீட்டைத்தேடிக்கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. என்னுடன் நண்பர் நடேசனும் வந்தார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அதாவது 1986 இல் எனக்கும் ஜீவாவுக்கும் விருந்தளித்து உபசரித்தபோது சந்தித்த அந்தச்சகோதரியை 2010 இல் மீண்டும் சந்தித்தேன். 1986 இல் அவர் கருவில் சுமந்திருந்த மகன், அன்று எம்முன்னே இளைஞனாக இன்முகம்காட்டி வரவேற்றார். ஆரத்தழுவிக்கொண்டேன்.
இந்த வரிகளை எழுதும்போது எனது கண்கள் பனிக்கின்றன.
என்னுடன் வந்திருப்பவர் நடேசன் என்பது அவர்களுக்குத்தெரியாது. நடேசன் எனது இனிய நண்பர். அத்துடன் பல மனிதாபிமானப்பணிகளை எத்தனையோ ஏச்சுக்கும் பேச்சுக்கும் கொடுமையான அவதூறு பரப்புரைகளுக்கும் மத்தியில் தொடர்ந்து மேற்கொண்டுவருபவர்.
போர் முடிவுற்றதும் தனது சொந்தப்பணத்தை செலவிட்டு பயணித்துச்சென்று முன்னாள் போராளிகளை பார்த்ததோடு மட்டும் நில்லாமல் அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் செலவிட்டவர்.
அத்துடன் இராணுவ உயர் அதிகாரிகளைச்சந்தித்து வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நூற்றுக்காணக்கான முன்னாள் போராளி மாணவர்களை விடுவித்து அவர்களின் இடைக்கால அவசர கல்வித்தேவைகளை கவனிக்க எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடாக ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தவர்.
அந்தக் கல்விப்பணியில் சில ஆசிரியர்களும் தொண்டர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். எமது நிதியம் இங்குள்ள அன்பர்களின் ஆதரவுடன் சுமார் பத்தாயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகளை சேகரித்து அனுப்பி அந்த மாணவர்களுக்கு விசேட வகுப்புகளை நடத்தியது.
முன்னாள் போராளி மாணவர்கள் உயர்தரப்பரீட்சையும் சாதாரணதரப்பரீட்சையும் எழுதினார்கள். சிலர் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவானார்கள்.
குறிப்பிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் நடேசனுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றினார்கள். சில நாட்களில் இறம்பைக்குளத்தில் அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தைகளின் பெறுபேறு, பலாபலன் இப்படித்தான் அமையவேண்டும். என்பதற்காகவே இச்சம்பவங்களையும் இங்கு பதிவுசெய்கின்றேன்.
நாம் குறிப்பிட்ட புனர்வாழ்வுப்பணிகளை முன்னெடுக்கும்போது,“ படிப்பை குழப்பிக்கொண்டு பெற்றோர் சொல் கேட்காமல் இயக்கத்தை நம்பிப்போனவர்களுக்காக நீங்கள் ஏன் மினக்கெடுகிறீர்கள்....” என்றும்,
“போர் என்றால் உயிரிழப்பு தவிர்க்கமுடியாதது. சரணடைய முன்னர் அவர்கள் ஏன் சயனைற்றுக்குப்பிகளை மறந்தார்கள்...” என்றும் நெஞ்சில் துளியளவு ஈரமும் இல்லாமல் பேசியவர்கள் எங்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறார்கள். அதனால்தான் அத்தகையவர்களை நாம் புலன்பெயர்ந்தவர்கள் என்று விளிக்கின்றோம்.
வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு வண.பிதா ஜோசப் அடிகளார் முன்செல்ல, புதுவை இரத்தினதுரை, யோகி, லோரன்ஸ் திலகர், இளம்பரிதி, எழிலன், தங்கன், திலக், பேபி சுப்பிரமணியம் போன்ற பலர் பின்தொடர்ந்து சென்று சரணடைந்தார்கள் என்ற தகவலை ஊர்ஜிதம் செய்துகொள்ள முடிகிறது.
அவர்களுடன் வந்த பெண்கள் குழந்தைகள் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.
நானும் மற்றவர்களைப்போன்று எனது இனிய நண்பனுக்காக, அவரது குடும்பத்தினர் போன்று காத்துக்கிடக்கின்றேன்.
நான் அவுஸ்திரேலியா திரும்பிய சில நாட்களில் புதுவையின் அக்கா, தமது கணவருடன் சென்று யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச்சந்தித்து, புதுவை பற்றிய தகவல்களை அறிந்துசொல்லுமாறு கேட்டதாக இணையத்தளங்களில் படங்களுடன் செய்தி படித்தேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆறுதல் கூறி தன்னால் இயன்றதைச்செய்வேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் காத்திருப்பு தொடருகிறது.
எதுவுமே அவரவர் சக்திக்குட்பட்டும் சக்திக்கு அப்பாற்பட்டும் நடக்கும் விடயங்கள்.
எனினும் நானும் காத்திருக்கின்றேன்.
தனது அன்னையை நெஞ்சுருகி நினைத்துப்பாடியிருக்கும் கவிஞர், இப்படியும் ஒரு கவிதையை எங்களிடம் விட்டுச்சென்றுள்ளார்.
முடிவு காண்பேன்
கன்னியர் அழகைப்பாடேன், காதலைப்பாடேன், வானின்
வெண்ணிலா தன்னைப்பாடேன், விசரரைப்பாடேன், ஆனால்...
எண்ணரும் துயரத்தோடு ஏழைகள் வாழும் வாழ்க்கை
இன்னுமா? பொறுக்கமாட்டேன். இதற்கொரு முடிவு காண்பேன்
கற்றவர் என்ற மாயைக் கவிஞர்கள் சிரித்தபோதும்
சற்றுமே நில்லேன், ஏழைச்சனங்களின் துயரம் போக்கச்
சொற்களாற் கவிதை யாப்பேன் துயரிதாற் போகாதென்றால்...
பெற்றதாய் தடுத்தபோதும் போர்க்களம் புகுந்து சாவேன்.
- முருகபூபதி – அவுஸ்திரேலியா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக