செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஒரு முத்தத்துக்கு இந்தப் பாடா... கிஸ்ஸடிக்கப் போய் மணப்பெண்ணை கீழே தள்ளி விட்ட மாப்பிள்ளை! (படங்கள் இணைப்பு)

முதல் முத்தம் கொடுக்கும் ஆர்வம் ஓவராகி விடவே, மணப்பெண்ணை அழுத்திப் பிடித்து முத்தம் கொடுத்த மணமகனின் வேகம் தாங்க முடியாமல் அந்தப் பெண் கீழே விழுந்து விட்டார். இதையடுத்து அருகில் நின்றிருந்த பாதிரியார் உள்ளிட்டோர் அந்தப் பெண்ணை தூக்கி விட்டு நிலைமையை சமாளித்தனர். இங்கிலாந்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.

அங்குள்ள ஒரு சர்ச்சில் திருமணம். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கூடியிருந்தனர். சடங்குகளை சர்ச் பாதிரியார் நடத்திக் கொண்டிருந்தார். எல்லாம் முடிந்தது. இதையடுத்து மணமகளுக்கு முத்தம் கொடுக்க அருகில் சென்றார் மணமகன். அனைவரும் ஆவலோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மணமகனுக்கு திடீரென வந்தது பாருங்கள் ஒரு வேகம்.. மணமகளை அவரது முதுகுக்குப் பின்னர் கைகளைக் கொண்டு சென்று அழுத்தமாக பிடித்தபடி உதடுகளைப் பொருத்தி முத்தமிட ஆரம்பித்தார். அவரது வேகம் தாங்க முடியாமல் மணமகள் பின்னோக்கிப் போனார். ஆனாலும் நம்மாளு விடவில்லை.

அவரும் உதடுகளை எடுக்காமல் அப்படியே முன்னேறினார். மணமகளும் சும்மா இல்லை, நன்கு தாட்டியான பெண்தான். இருந்தாலும் மாப்பிள்ளை உதடுகளை எடுக்காமல் போட்டு அமுக்கியதால், பாரம் தாங்க முடியாமல், அப்படியே தொபுக்கடீரென பின்னால் சாய்ந்து விட்டார்.

இதைப் பார்த்து அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர். பலர் விசிலடித்தனர். அருகே நின்றிருந்த பாதிரியாருக்கு பெரும் தர்மசங்கடமாகி விட்டது. இருந்தாலும், அவரும் இன்னும் சிலரும் சேர்ந்து மணமகளைப் பிடித்து மெதுவாக தூக்கி நிறுத்தினர். அவரது கவுனை சரி செய்து விட்டனர்.

இந்த காமெடி கலாட்டாவால் மாப்பிள்ளைக்கு வெட்கமாகிப் போய் விட்டது. மணமகளிடம் ஸாரி சொல்லியபடி வழிந்து நின்றார். அதன் பின்னர் மகா மென்மையாக இன்னொரு முத்தத்தையும் வைத்து சர்ச்சையே கலகலப்பாக்கி விட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல