இலங்கையும் ஈழமும் வெவ்வேறானவையா? வரலாறு என்ன சொல்கிறது?
இலங்கையும் ஈழமும் ஒன்றே என வரலாறு கூறுகிறது.அதாவது தற்போதய இலங்கைத்தீவு தமிழர்களின் தாயகம்.சீனா தீபெத்தை ஆக்கிரமித்துக் கொண்டு தற்போது அருணாசல பிரதேசத்தை தெற்கு தீபெத் என்று கூறிக் கொண்டால்,அவை ஒன்றாகி விடுமா அல்லது சீனாவுக்கே சொந்தமாகி விடுமா? அதே போலவே தமிழர்களின் நாடான இலங்கையை அபகரித்த சிங்கள ஆரியர்கள், அதற்கு நாம் வைத்த பெயரை சூட்டிக் கொண்டு தங்கள் நாடு என்று சொல்லிக் கொண்டால், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட முடியுமா? பாலைவனத்தில் மணல்மழை அடிக்கிறது.கூடாரத்திற்குள் இருந்தவனிடம், சிறிய இடம் கேட்டு வந்த வழிப்போக்கன் தன்னையும்,தன் ஒட்டகத்தையும் உள்ளே நுழைத்துக் கொண்டு, இது என் கூடடாரம் என்றால் எப்படி இருக்கும்?
இலங்கை என்பது இலங்காபுரி என்று அழைக்கப்பட்டு இராவணேஸ்வரனால் ஆட்சி செய்யப்பட்ட,அன்றைய இலங்காபுரி(இன்றைய இலங்கை முழுவதும்) தமிழர் பிரதேசமாகும்.இராமாயணத்தில் கிட்கிந்தாகாண்டம் உத்தரகாண்டத்தில், இந்த இலங்காபுரி குபேரனால்,(குபேரன் - இராவணேஸ்வரனின் அண்ணன்,அழகாபுரியை தலை நகராக்கி ஆண்டவன்) இராவணனுக்கு கொடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
உத்தரகாண்டம் பின்னர் சேர்க்கப்பட்டது எனவும்,ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது என்வும் பல சர்ச்சைகளுக்கு உரியதாக இருப்பினும்,வால்மீகி இராமாயணம் இலங்கையை இராவணனால் ஆழப்பட்ட பல சிற்றசுகளைக் கொண்டதாகவே குறிப்பிடுகிறது.வால்மீகி இராமாயணம், இராவணனை சீதையை கொண்டு சென்ற செயலைத் தவிர வேறு பல இடங்களில் நன்றாகவே உயர்த்தி சொல்லியிருக்கிறது.அதே சமயம் வால்மீகி இராமாயணமும்,கம்ப இராமாயணமும் பல இடங்களில் வேறுபடுகிறது.இதை அறிஞர்கள், தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது என்கின்றனர்.இராமாயணம் சொல்வதையும், பார்க்கர், Ancient Ceylon, போன்ற ஆய்வாளர்கள் சொல்வதையும் வைத்துப் பார்க்கும் போது, விசயன் வருகைக்கு முன் இயக்கர்,நாகர் என மிக நாகரீகம் மிக்க குடிகள் வாழ்ந்தனர் என்பதும் தெரிய வருகிறது.
இலங்கைத் தீவின் வரலாறு எனப் பார்க்கும் போது,விசயனின் வருகைக்குப் பின்னரே சரித்திரம் ஆரம்பிக்கப்படுகிறது.விசயனின் வருகை என்பது இந்து நதி நாகரீக நகரங்களான மொஹென்சதாரோ,கரப்பா வின் அழிவுக்குப் பின், ஆரியர் கைபர் கணவாய் ஊடாக தற்போதய இந்தியாவிற்குள் நுழைந்த பின்னருமாகும்.
குஜராத்தில் இருந்து துரத்தப்பட்ட விசயன்,தாமிரபரணியில் வந்திறங்கியதும், குவேனியை மணந்து அவள் துணையுடன் இயக்க சமூகத்தை அழித்ததும், இலங்கையின் முதலாவது இன அழிப்பாக வரலாறு கூறுகிறது.இதைத் தொடர்ந்து கிபி 2 ல் கோத்தகபாய என்பவனால் நடத்தப்பட்ட மனிதப் படுகொலைகள் பயங்கரமானவை எனக் குறிப்பிடும் சரித்திர ஆசிரியர்கள், ஆட்சியில் இல்லாத ஒருவன்,ஆட்சிக்காக செய்த படுகொலை இது எனக் குறிப்பிடுகின்றனர். அமெரிக்காவில் வந்திறங்கிய கொலம்பஸ்,எப்படி சிவப்பிந்தியர்களையும்,அரவாக்ஸ் ஆதி குடிமக்களையும் கொன்றும்,தென் இந்தியப் பகுதியில் வந்திறங்கிய வஸ்கொட்காமா எப்படி கொலைவெறியுடன் நடந்தான் என்பதையும் போன்று விசயனின் செயல் இருந்திருக்கிறது.
விசயனின் தன் பலத்தை அதிகரித்ததை அடுத்து,அவன் கூட்டத்தினர், சிங்களர் குடியேறிய பகுதிகள் தம்பண்ணை-தாமிரபரணி எனவும்,வடக்கு இன்றைய வட-கிழக்கு இலங்காபுரி,ஈழம்,நாகதீபம்,நாகதீவு எனவும் அழைக்கப்படலாயிற்று. கிரேக்க,ரோம,அராபிய வணிகர்கள்,by Birch T.H Maps Oxford University, பொதுவாக தாமிரபரணி,தப்பிரபென் என்றே அழைத்தனர்.இதை தொலமியின் உலகப் படத்திலும் காணலாம்.தொலமியின் உலக வரைபடம் இலங்கையை இன்றைய இலங்கையை விட பெரிதாக காட்டியிருக்கிறது.மகாவம்சமோ by Wilhelm Geiger,தாமிரபரணியை, பாளிமொழியில்,தம்பள்ள,எனக் குறிப்பிடுகிறது. இதற்கு கைகரும்,பார்க்கர் என்ற வரலாற்று ஆசிரியர்களும் கூறும் காரணம் வேறுபட்ட நாடுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்த காரணத்தால், இலங்காபுரி,ஈழம்,நாகதீபம் எனவும்,சிங்களர் வாழ்ந்த பகுதிகள் தம்பண்ணை,தம்பள்ள,றுகுண,இப்படி பல பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.பல நாடுகளின் கூட்டு அன்னிய ஆட்ட்சியினரால் இன்றைய இந்தியாவாயிற்று என்பதை போல்,இலங்கைத் தீவு,ஒன்றாக்கப்பட்டு இலங்கை என இராமாயண கால பெயரை வைத்து இருக்கலாம்.இதற்கு இராசாவளி போன்ற இலங்கை சரித்திர நூல்களை ஆதாரம் காட்டி வரலாற்று ஆசிரியர்கள் வைக்கின்றனர்.
புத்தர் இரண்டாவது முறையாக வந்த போது,நாக தீபத்தை இசுகிரியன் என்பவன் ஆண்டதாக மகாவம்சம் கூறுகிறது.அதே சமயம் மகோதரன்,குலோதரன் என்ற இரு மன்னர்களுக்கிடையே நடந்த பிணக்கை புத்தர் தீர்த்து வைத்தார் என்கிறது மகாவம்சம் Chap.1.20.30.
இன்று போல் அன்றும் தமிழர்கள் பிளவு பட்டு, கோகர்ணம், மாந்தை, இலங்காபுரி, நாகதீபம், மணிபல்லவம், நாவலந்தீவு,கரியாலை,திரிகூடம் என பல சிற்றரசுகளாக பிளவுபட்டு ஆட்சி செய்ததும்,அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாலும்,விசயனால் பல தமிழர் நிலங்களைக் கைப்பற்ற முடிந்தது.அவன் தம்பண்ணையில் இருந்து மெல்ல தென் இலங்கைப் பகுதிகளை தன்னகப் படுத்தி,அனுராதபுரம் வரை காலைப் பதித்தான். ஆனாலும் பின்னர் அநுராதபுரத்தில் சூரதீசன் என்ற சிங்கள மன்னனை எதிர்த்து, உத்தர தேச,ஈழவூரில் இருந்து குத்திகன்,செனன் என்ற தமிழர்கள் படை நடத்தி சென்று,சிங்களரை வென்று 22 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர் என மகாவம்சத்தை ஆதாரம் காட்டி Histrory of Ceylon தெரிவிக்கிறது.ஆனாலும் வரலாற்றுத் தகவல்கள் பலவற்றை திரித்துக் கூறிய மகவம்சம் இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடுகிறது.வரலாறு எவ்வளவு மாற்றப்படுகிறது என்பதற்கு இன்னொன்றையும் சொல்லலாம்.மகாவம்சம் ஆங்கிலப் பதிப்பில் 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த துட்டகைமுனுவை 843 செய்யுள்களிலும்,44 ஆண்டுகள் ஆட்சி செய்த ஈழராஜா எல்லாளனை 21 செய்யுள்களிலும் எழுதி அடக்கி விட்டது.இதை மகாவம்சம் ஆங்கிலப் பதிப்பில் நீங்கள் காணலாம்.
இலங்கை சரித்திரத்தில் வரலாற்று ஆசிரியர்கள், இன்று காட்டப்படும் ஈழம் போன்று,நீண்ட ஒரு கோட்டை கீறி,தெற்கே சிங்கள நாடும்,வடக்கே அனுராதபுரம் வரை உள்ள இலங்கையை தமிழர் பகுதிகளாக காட்டுகிறார்கள். அதற்குக் காரணம்,தமிழர்கள் சிற்றரசுகளாக இருந்து வந்ததால்,விசயன் சிறிது சிறிதாக தமிழர் நிலங்களை தன்னகப் படுத்தி அனுராதபுரம் வரை காலை உறுதியாக வைத்துக் கொண்டதுதான்.இதே நிலை இன்று ஏற்பட்டுள்ளது.இராணுவம்,மற்றும் குடியேற்றங்களால் தமிழர்கள், கடைசி நிலமாக யாழ்ப்பாணம் வரை தள்ளப்படலாம். கிழக்கை இழந்து வரும் தமிழர்கள்,வன்னி நிலப் பரப்பையும் இழக்கும் நிலை விரைவில் ஏற்படலாம்.இந்த நிலை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,இந்தியாவில் ஆரியர்களால் தள்ளப்பட்ட தமிழர்கள், இன்றைய தமிழ்நாடு வரை வந்து விட்டதைக் குறிப்பிடலாம்.
மற்றப் பகுதிகள் றுகுணு,கல்யாண் பிரதேசங்களாக,சிங்களர் வாழ்ந்த இடமாக சொல்லப்பட்டு வந்துள்ளது. தமிழர்களுடனான போர்களில் தோல்வி அடையும் சிங்களர் உடனே றுகுணு,கல்யாணி பிரதேசங்களுக்கு ஓடி ஒழித்துக் கொள்வது வழக்கமாகவும் இருந்தது.இராஜராஜன் இளைய தளபதியான இளங்கோவேள் என்பவன் தமிழர்களைக் காக்கவும்,சிங்களரின் கொட்டத்தை அடக்கவும் படை நடத்திய போது, ஓடிய சிங்கள மன்னன் றுகுணுவில் மறைந்திருந்ததையும் வரலாறு சுட்டிக் காட்டுகிறது.
இதே சமயம் இலங்கை இராமாயணத்திற்கு முன்னர் எப்படி அழைக்கப்பட்டது?என்றால் அது எலு நாடு என்பதாகும்.எலு எல்லம் எனவும் பின்னர் ஈழம் எனவும் மருவிற்று. (தமிழ் நாட்டின் அன்றைய பெயர் மூ நாடாகும்.இதுவே லெ மூ ரியா என அழைக்கப்பட்டது.) இப்படி பல பெயர்கள் வரக் காரணம்,இன்றைய இலங்கை அன்று இந்தியக் துணைக் கண்டத்துடன் சேர்ந்தே இருந்தது தான் என்பதாகும். இராவணேஸ்வரன் காலத்தில் இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு நடந்து செல்லக் கூடியதாக இருந்திருக்கிறது.அலைகள் அதிகரித்து நீர் அதிகரிக்கும் நாட்களில் தவிர சுலபமாக தமிழ் நாட்டிற்குள் வந்து விட முடியும். இதற்கு இராவணேஸ்வரன் தங்கை பொழுபோக்க தமிழ் நாட்டின் பகுதிகளுக்கு வந்து போவதை சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆக தமிழர் வாழ்ந்த பிரதேசங்கள் நாகநாடு,மாவை, ஈழம், உத்தரதேசம், தமிழ்ப்பட்டணம், சிங்கை நாடு, இலங்காபுரி,தர்மதீபம்,லங்காதுவீபம்(வடமொழியில்) எனப் பல பெயர்களில் பல நாடுகளாக,பல அரசர்களால் ஆழப்பட்டு வந்திருக்கிறது.முழுத் தீவையும் செலான் என போத்துக்கீசியரும்,தப்ரபேன் என கிரேக்கரும்(தொலமியின் உலக வரைபடம்),செரண்டிப் என அராபியரும்,சிலோன் என போத்துக்கீசியர் வழியில் ஆங்கிலேயரும் அழைத்தனர். ஆங்கிலேயர்கள் அன்றைய அனைத்து நாடுகளையும் இந்தியாவாக்கியதும், சிங்களவர்கள்,தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களை இலங்கை என ஒரு நாடாக்கி சென்றதும் எவ்வளவு அழிவுகளை, பிரிவினைகளை,வெறுப்புக்களை தந்ததும்,இன்றைய ஈழ இனப்படுகொலைக்கும் வித்திட்டதுடன், அன்னியர் மேல் பூசப்பட்ட மாறாக் கறையாகவும் காட்டி நிற்கிறது, என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.சிங்களவர்கள் இலங்கை என்ற முழுத் தீவையும் இராமாயணத்தில் கூறப்பட்ட இராவணனின் இராச்சியத்தை லங்காவாகவும், சிறிலங்காவாக மாற்றினாலும் கூட இலங்கை என்பது இராவணேஸ்வரன் இலங்காபுரியை தலை நகராக்கி அரசாண்ட தமிழர் நிலமே.
இராமாயணத்தில் சொல்லப்பட்ட இலங்காபுரியை தங்களதாக்கிக் கொள்ள, லங்கா என சிங்களரும் மாற்றிக் கொண்டது போல்,இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்க்கும் போது,மகா அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் வர முயற்சி செய்த போது,இந்து நதி உள்ள நாடு என அன்று கிரேக்கர்கள் அழைத்ததை குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.இந்து நதி எப்படி வந்தது, என்றால் கட்டுரை நீண்டு விடும்.
இந்த பெயர் மாற்றங்களைப் பற்றி வரலாற்று அறிஞர் இராமசாமி ஐயர்,பின்வருமாறு கூறுகிறார். வரலாறு எங்கே மௌனம் சாதிக்கிறதோ,அங்கே இடப்பெயர்கள் வாய் திறந்து பேசக் கூடும். வரலாறு மௌனம் சாதித்ததால்,இன்று இலங்கையும்,இந்தியாவும் வாய் திறந்து பேசிக் கொண்டிருக்கின்றன.நம்மால் பேச முடியலையே!
ஒரு சிறிய ஊரில் காலடி வைத்த விசயன்,தன் காலை அகல் விரித்து,அனுராதபுரம்,கதிகாமம் என ஆக்கிரமித்து,இன்று வன்னியையும்,கிழக்கையும் ஆகிரமித்து,யாழ்ப்பாணத்திற்கு மக்களை உதைத்து தள்ளிய நிலையில்,தமிழர்கள் விழித்துக் கொண்டு செயல்படா விட்டால் இறுதியில் முழுத் தீவும் சிங்களர் கைக்கு மாறி தமிழர்கள் என்ற இனம் இருந்ததை வரலாற்றில் தான்,வரலாறு மௌனம் சாதிக்கா விட்டால், கண்டறிய முடியும்.
இந்த விழிப்புணர்ச்சியும்,போராட்டமும் ஈழத் தமிழர்கள் கடமை மட்டுமல்ல அனைத்து தமிழர்களின் கடமையுமாகும்.
எது எப்படியோ,இன்று பழைய வரலாறுகளை யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் கூட,நம் முன்னோர் வாழ்ந்த இலங்காபுரியையோ, ஈழத்தையோ,மாந்தையோ,உத்தர தேசத்தையோ, நாகதீவையோ, அழகாபுரியையோ, மணிபல்லவத்தையோ, ஈழத் தமிழர்கள் கேட்கும் அவர்கள் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து,அவர்களை தங்கள் சொந்த நாட்டில் வாழ விடுவதே நியாயமான செயலாகும்.இதை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து கொண்டு செயல் பட வேண்டும் என்பதே அனைத்து தமிழர்களினதும் கோரிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக