புதன், 5 செப்டம்பர், 2012

உலக குள்ளமானவர்களின் சந்திப்பு

உலகிலேயே மிகவும் குள்ளமான ஜோதி ஆம்கே என்ற 18 வயதாகிய பெண்ணும் மிகவும் குள்ளமான 72 வயதான சந்திர டாங்கே என்ற ஆணும் 2013ஆம் ஆண்டிற்கான கின்னஸ் புத்தகத்திற்காக படங்களுக்கு போஸ் கொடுப்பதற்காக ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்தவர் ஜோதி ஆம்கே. நேபாளத்தைச் சார்ந்தவர் சந்திரடாங்கே. கின்னஸ் புத்தகத்திற்காக இவர்கள் போஸ்கொடுக்க முதல்முத
லில் சந்தித்துள்ளனர்.

ஆனால் உலகிலேயே மிகவும் குள்ளமாக ஆணும் குள்ளமான பெண்ணும் முதன் முதலில் சந்தித்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதுவே புது கின்னஸ் சாதனை என்று லண்டனில் இருந்து வெளியாகும் “டெய்லி மெயில்” என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரின் உயரத்தை அளவிட்ட கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகள் ஜோதி ஆம்கேயின் உய
ரம் 24.7அங்குல உயரம் எனவும் டாங்கே 21.5 அங்குல உயரமும் உடையவர்கள் எனவும் அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கின்னஸ் புத்தகத்திற்கான புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது அவரவருடைய பாரம்பரிய உடை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல