ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் ஆண்களுக்கே உரித்தான எடுப்பும், மிடுக்கும் மிக்கவர். ஆஜானபாகுவான கம்பீர தோற்றம் கொண்டவர். இயக்க தலைவர்களுக்குள் நெட்டையான தோற்றம் உடையவரும்கூட. ஈ. பி. ஆர். எல். எப் செயலாளர் நாயகம் பத்மநாபாவும் நெட்டையான தோற்றம் உடையவர்தான்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களோடும் சபா நல்லுறவை பேணி வந்தார். சபாவை இயக்கக்காரர்கள் அனைவரும் சிறீ அண்ணா என்றுதான் அன்பாக அழைப்பார்கள்.
சிறீ 1980 களின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் தங்கி இருந்தார். அதே காலப் பகுதியில் அன்ரன் பாலசிங்கம் நோய்வாய்ப்பட்ட நிலையில் தமிழ்நாடு வீட்டில் தங்கி இருந்தார். வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். ஆனால் அன்ரனால் நடக்க முடியாது. அன்ரனை வருத்தம் பார்க்க வந்தார் சிறீ. நிலைமையை புரிந்து கொண்டார். பாலாவை அலாக்காக தூக்கிக் கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றினார். புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலரும் விழிகள் பிதுங்க வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.
வாகனம் வைத்தியசாலை வாசலை சென்றடைந்தது. இங்கும் எவரும் பாலாவை தூக்குகின்றமையை சிறீ அனுமதிக்கவில்லை. இவரே அன்ரன் பாலாவை மருத்துவமனைக்கு உள்ளும் தூக்கிச் சென்றார்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்ரனின் மனைவி அடேல் பாலசிங்கத்துக்கு சிறீ மீது ஒரு பிடிப்பும், விருப்பும் ஏற்பட்டது.
இதே சிறீயைத்தான் தலைவர் பிரபாகரனின் நேரடி உத்தரவின் பேரில் கோண்டாவில் அன்னங்கை தோட்டம் ஒன்றில் வைத்து புலிகள் பிந்திய நாட்களில் சுட்டுக் கொன்றனர்.
ஆனால் நன்றி மறந்து விட்டார் அன்ரன். சிறீயை புலிகள் சுட்டுக் கொன்றமையை வெளிப்படையாகவே அடிக்கடி நியாயப்படுத்திப் பேசி வந்திருக்கின்றார் அன்ரன். இது அடேல் பாலசிங்கத்தை பெரிதும் பாதித்து இருந்தது. இதனால் சிறீ விடயத்தில் கணவருடன் முறுகல் பட்டு வந்திருக்கின்றார்.
அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை என்கிற நூலை எழுதி உள்ளார் அல்லவா? இதில் சிறீ பற்றிக் குறிப்பிட மறந்து இருக்கவில்லை. சபாரத்தினம் கருணை உள்ளம் கொண்டவர் என்கிற வசனத்தை மனப் பூர்வமாகவே புத்தகத்தில் பதிவு செய்து கொண்டார்.
தாய்நாடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக