ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மர்ம பெண் சஹானா கைது!

காதல் மற்றும் திருமணங்களின் மூலமாக பல ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய கேரள அழகி சகானா கைது செய்யப்பட்டார்.கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிடிபட்ட சகானாவை இரவோடு இரவாக சென்னை கொண்டு வந்த தனிப்படை பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட சகானாவிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் ஆடம்பர வாழ்க்கைக்காக பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றினேன் என்றார்.

கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவைச் சேர்ந்த இவர் முதலில் சித்திக் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தானது.

இதன் பின்னர் சென்னையில் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்த சகானாவுக்கு பல ஆண்களுடன் நெருக்கம் ஏற்பட்டது. இதன் மூலமே மணி கண்டன், உதவி இயக்குனர் ராகுல், பிரசன்னா என 4 பேரை திருமணம் செய்திருக்கிறார் சகானா. மேலும் தனக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருப்பதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல