திங்கள், 1 அக்டோபர், 2012

கடாபியைக் கொன்றது யார்?

கடாபியினை உயிருடன் பிடித்த பெருமை பிரெஞ்சு உளவுத் துறையினரையே சாரும். அத்தோடு அவர் தலையில் சுட்டு அவரைக் கொன்றதும் பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரியே தவிர லிபிய புரட்சிப்படையினர் அல்ல. இப்படியான ஒரு செய்தியை Corriere della Serra என்ற ருமேனிய நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.


கடாபியின் இறப்பில் மர்மம் பலநாட்களாகவே இருந்து வந்துள்ளது. அவர் கொல்லப்பட்ட விதத்திலும் பலத்த சந்தேகம் இருந்தே வந்தது. அவர் தலையில் சுட்பட்டதாலேயே இறந்துள்ளதாகவும் மருத்துவச் சான்றிதழ்கள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களுக்கு மிகவும் துல்லியமான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னை நாள் தேசிய மாற்றங்களுக்கான ஆலோசனை அவையின் (CNT) அரசாங்கத்தின் பிரதமரும் இன்று தேசிய மாற்றங்களுக்கான ஆலோசனை அவையின் செயலாக்கப் பிரிவின் தலைவருமான Mahmoud Jibril வழங்கியுள்ளார். இவர் போர் நடந்த காலங்களில் பலமுறை வந்து நிக்கோலா சார்க்கோசியைச் சந்தித்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது செய்தியில் « ஒரு வெளிநாட்டு உளவாளி கடாபியைக் கொல்வதற்காக லிபியப் புரட்சிப் படைகளுககுள் ஊடுருவியிருந்துள்ளார் » எனத் தெரிவித்துள்ளார். எகிப்பதியத் தொலைக்காட்சியாக Dream TV ற்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திரிப்போலியைத் தளமாகக் கொண்ட மேற்கத்தேய இராஜதந்திர வட்டாரங்களில் எப்பொழுதுமே பிரெஞ்சு உளவுத்துறையின் பிரசன்னம் லிபியாவில் உள்ளது பற்றி பேசப்பட்டே வந்துள்ளது. நேட்டோவிலும் மற்றும் வான் தாக்குதல்களிலும் பலத்த அதிகாரத்தைக் கொண்டிருந்த நிக்கோலா சார்க்கோசி மூலம் லிபியப் புரட்சிப்படை வீரர்களை பிரெஞ்சு உளவுத்துறை உள்வாங்கியிருக்கலாம். பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆயுதங்கள் புரட்சிப்படையினருக்கு வழங்கப்பட்டிருந்தது குறித்தும் சர்சசைகள் கிளம்பியிருந்தன. ஆகவே புரட்சிப்படையினருக்குள் வெளிநாட்டு உளவாளிகள் ஊடுருவியிருந்தனர் என்பது நிச்சயமாகப் பிரெஞ்சு உளவாளியாகவே இருக்கமுடியும் என உறுதியாக இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதற்கும் மேலாக கடாபியின் உறவினர்கள் கடாபிக்கும் நிக்கோலா சார்ககோசிக்கும் இடையிலான இரகசியங்களை வெளியிடப் போவதாக மிரட்டியமையும் முக்கியமாக 2007ம் ஆண்டு நிக்கோலா சார்க்கோசி தேர்தலுக்காகப் பெருந்தொகைப் பணத்தை கடாபியிடம் வாங்கியிருந்தமையை வெளியே சொல்லப் போகின்றோம் என்றும் மிரட்டியிருந்தனர். இது கடாபியை சீக்கிரமே அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம் மற்ற நாடுகளை விட பிரான்சிற்கே ஏற்பட்டது. இதுவே லிபியா மீதான வான் தாக்குதல்களுக்கு பிரான்சை அவசரப்படுத்தியது.

தேசிய மாற்றங்களுக்கான ஆலோசனை அவையின் சார்பில் வெளிநாட்டு உளவுத்துறையினருடனான தொடர்பில் இருந்த Rami El Obeidi, Benghazi யிலிருந்து வழங்கிய முக்கிய தகவல் ஒன்றை COURRIER பத்திரிகை வெளியிட்டுள்ளது. கடாபி சிரியாவுடனான தொடர்பைப் பேணி வந்த Iridium செய்மதித் தொலைபேசியை வழித் தொடர்ந்ததன் மூலம் கடாபியின் இருப்பிடத்தை அறிவது நேட்டோவின் தொழில்நுட்ப விற்பன்னர்களுக்கு வெறும் குழந்தை விளையாட்டாகவே இருந்தது என்று கூறியுள்ளார். அப்படியிருந்தும் அவர் கொல்லப்பட்டிருப்பது நிகழ்ச்சி நிரலுக்கமையவே போலுள்ளதாகவும் தெரிவித்தள்ளார்.
Omran Ben Chaaban

கடாபியைக் கொன்றவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 22 வயது Omran Ben Chaaban திங்கட்கிழமை பரிஸ் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவித்திருக்கும் இவ்வேளை கடாபின் கொலை பற்றிய இந்தப் புதிய செய்தி எழுந்திருப்பது முக்கியமானது. Omran Ben Chaaban கடாபியின் ஆதரவாளர்களால் கடத்தப்பட்டுச் சுடப்பட்டு மரண காயத்தில் இருந்தபோது மனிதாபிமான அடிப்படையில் இவர் பரிசிற்கு வைத்தியத்திற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளார். காயப்பட்ட எல்லோரும் இங்கு சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டனரா என்றால் இல்லை. ஆனாலும் விசேடமாக இவர் கொண்டு வரப்பட்டிருந்தார். ஆனாலும் சிகிச்சைகள் பலனின்றி இவர் இறந்து விட்டதாக பிரான்ஸ் வெளியுறவுச் செயலகம் அறிவித்துள்ளது.

லிபியப் போரின் பின்னரான கடாபியின் கொலையின் பின்னர் கடாபி உபயோகித்த துப்பாக்கியை உயரத் தூக்கிக் கத்தியபடி இவரது காணொளி பல ஊடகங்களிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் உளவுத்துறை கடாபியின் கொலையில் ஈடுபட்டிருப்பது குறித்து கடாபியின் உறவினர்கள் பிரான்ஸ் மீது போர்க்குற்ற வழக்குத் தொடுக்க உள்ளனர். உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபி பிரான்ஸ் உளாவாளியால் சுடப்பட்டது நிரூபிக்கப்படால் போர்க்குற்ற வழக்கு சாத்தியமாகலாம். ஏற்கனவே தேர்தல் பணப்பரிமாற்றம் காரணமாகவே நிக்கோலா சார்க்கோசி முழு முனைப்புடன் கடாபியின் அழிப்பிற்கு வழிவகுத்ததாக ஒரு வழக்கு நிலுவையிலுள்ளது. இதுவும் இணைந்தால் போர்க்குற்றமும் சாத்திமாகலாம்.

தமது நாட்டினதும் சொந்த நலன்களுக்காவும் மற்றைய நாடுகளின் வீழ்ச்சிகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் உயிரழிவுகளுக்கும் வழிவகு;கும் மேற்குலக நாடுகளிடம் எம் இனம் அழிக்கப்ட்டதற்காக இனவழிப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்காக நீதி கிடைக்கும் என்று நம்பியிருக்கும் எமது நிலையும் கேள்விக்கிடமாகவே உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல