போல்டரில் சில பைல்களின் பெயருக்கு முன்னால், $$என்ற அடையாளங்கள் உள்ளதை அவதானித்து இருப்பீர்கள். இவை எதனைக் குறிக்கின்றன என்றால் குறிப்பிடும் இந்த பைல்கள் அனைத்தும் தற்காலிக பைல்களே.
இந்த பைல்களின் துணைப் பெயராக “.tmp” என்ற எக்ஸ்டன்ஷன் பெயர் இருக்கும்.
பெரும்பாலும் இவை டெம்பரரி போல்டரில் தங்க வைக்கப்படும்.
இவை எதனால் ஏற்படுகின்றன? ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களும் இது போன்ற தற்காலிக பைல்களை உருவாக்குகின்றன.
நாம் ஆட்டோ சேவ் மற்றும் பைல்களுக்கான டேட்டாவினை அமைக்கையில், இது போன்ற தற்காலிக பைல்களை புரோகிராம்கள் அமைக்கின்றன. இந்த புரோகிராம்களை, வேலை முடித்து மூடுகையில், பைல்கள் சேவ் செய்யப்பட்டு பதியப்படுகையில், இந்த தற்காலிக பைல்கள் அனைத்தும் நீக்கப்படும். ஆனால் இவ்வாறு நீக்கப்படுவது, முறையாக புரோகிராம்கள் மூடப்படும்போதுதான். கம்ப்யூட்டர் கிராஷ், முறையாக இல்லாமல் கம்ப்யூட்டரை நிறுத்துவது, பொதுவான புரோகிராம் பிரச்னைகள் எனப் பல்வேறு காரணங்களினால், புரோகிராம்கள் முறையாக மூடப்படுவது இல்லை. அது போன்ற வேளைகளில், இது போன்ற தற்காலிக பைல்கள் நீக்கப்படுவதில்லை.
ஆனால், இவற்றை நாமாக நீக்குவதனால், மெயின் பைலுக்கு எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை. பொதுவாக, டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அனைத்தையுமே நாம் நீக்கிவிடலாம். இவை அவ்வப்போது நீக்கப்பட வேண்டும். ஹார்ட் டிஸ்க்கில் இந்த பைல்கள் இடத்தைப் பிடிப்பதனால், இவை கம்ப்யூட்டர் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக