வியாழன், 29 நவம்பர், 2012

19 ஆண்டுக்கு பிறகு தனது மனைவி ஒரு ஆண் என புரிந்து கொண்ட கணவர்!

தன் மனைவி ஆண் என்பதை, 19 ஆண்டுகளுக்கு பிறகு புரிந்து கொண்டார், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவர்.பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஜான், 64; இந்தோனேசியாவைச் சேர்ந்தவர், மோனிகா. இரண்டாம் திருமணமாக, ஜான், 93ம் ஆண்டு, மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். 48 வயதாகும் மோனிகாவுக்கு, குழந்தை இல்லை. இது குறித்து, ஜான் கண்டு கொள்ளவில்லை.


ஏனெனில், முதல் மனைவி மூலம் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில், மோனிகாவுக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு, ஜானுக்கும், மோனிகாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நைட் கிளப்புகளில், மோனிகா, குட்டை பாவடை அணிந்து திரிவதாக, ஜானின் நண்பர்கள் கூறியுள்ளனர்.


மோனிகா மீது சந்தேகமடைந்த ஜான், அவருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது தான் மோனிகா, "நான் பெண்ணே அல்ல. பிறக்கும் போது ஆணாக இருந்தேன். பின்னர் அறுவை சிகிச்சை மூலம், பெண்ணாக மாறினேன்' என, உண்மையைப் போட்டுடைத்தார்.


இதனால், வாழ்க்கை வெறுத்த ஜான், மோனிகாவை, வீட்டை விட்டு வெளியேற்றும் வகையில், கோர்ட்டில் மனு செய்தார். ஆனால், கோர்ட் இந்த மனுவை நிராகரித்து விட்டது; "விவாகரத்துக்கு பிறகு தான், அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்' என, தெரிவித்து விட்டது. தற்போது இருவரும், ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல