ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஹஜ் யாத்திரை 2012 (படங்கள் இணைப்பு)

உலகின் மிக பெரிய யாத்திரைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையில்
இவ்வருடம் 04 மில்லியன் வரையான முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளார்கள்.

இதற்காக 120,000 அதிகமான பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

1000 வாகனங்கள், 25 சிவில் பாதுகாப்பு ஹெலி கப்டர்கள், 20 பொது பாதுகாப்பு ஹெலி கப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. 360 விமானிகள் மற்றும் தொழினுட்பவியலாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

30000 பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. 100 ரோந்துப் படைகள் விசேட கடமைகள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. 200 பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. இயலுமானவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் செல்ல வேண்டும்.

யாத்திரிகர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான வெண்ணிற உடுப்பு, ஒரே மாதிரியான சப்பாத்து அணிந்து இருப்பர்.

இது அல்லாஹ் முன்பாக எல்லோரும் சமம் என்கிற தத்துவத்தை உணர்த்துவதாக சொல்லப்படுகின்றது.
 
 
 

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல