சனி, 17 நவம்பர், 2012

பெண்மணிக்கு முடிதிருத்த மறுத்த இஸ்லாமியர் மீது வழக்கு!

டொரன்டோ நகரில் முடிதிருத்தம் செய்பவர்கள் ஒரு பெண்மணிக்கு முடிதிருத்தம் செய்ய மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பெண்மணி மனித உரிமை வழக்கு தொடர்ந்துள்ளார்.

Faith McGregor என்ற அந்த பெண்மணி முடிதிருத்தம் செய்யும் Terminal Barber Shop என்ற இடத்திற்கு சென்றபொழுது ஆண்களுக்கு மட்டுமே முடிதிருத்தம் செய்யப்படும் என்று பெண்மணியிடம் கூறியிருக்கின்றார்கள்.
முடிதிருத்த நிலையத்தின் உரிமையாளர் தான் இஸ்லாமியர் என்பதால் தனக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத பெண்மணிக்கு முடிதிருத்தம் செய்ய இயலாது என்றும் கூறியுள்ளார்.

35 வயது நிரம்பிய அந்த பெண்மணி ஒன்டாரியோவில் மனித உரிமை வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டப்படி ஆண், பெண் என்ற பாகுபாடு பார்க்கக்கூடாது.

ஆனால் மதம் சார்ந்த உரிமைகள் தனக்கு உள்ளதாக முடிதிருத்த நிலையத்தின் உரிமையாளர் கூறியுள்ளார். வழக்கு புதுவருட சமயத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல