வெள்ளி, 23 நவம்பர், 2012

கனடாவில் வியாபார கடன் மோசடியில் நான்கு தமிழர் உட்பட ஆறு பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்

கடந்த வாரம் டொராண்டோவில் (Toronto) ஆறு பேர் திட்டம் இட்ட வியாபார கடன் மோசடி தொடர்பில் கனடிய சிறப்பு காவல்துறையினரால் (Royal Canadian Mounted Police) குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 2006 – 2007 காலப்பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்து கனடிய வங்கிகளிடம் இருந்து 2 மில்லியன்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக சிறப்பு காவல்துறையினர் (RCMP) தெரிவிக்கின்றனர்.

இவர்கள் போலியான வியாபார நிலையங்களை உருவாக்கி, அதற்கு தேவையா உபகரணங்களை வாங்குவதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதாகவும் கூறி, போலியான ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து இந்த மோசடியை செய்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் சுரேஷ் பரமலிங்கம் (33), பாலமுருகன் பாலகிருஷ்ணன் (32), பவன் சிவகுருநாதன் (31), ஆனந்தருபன் வையாபுரி (35), சுல்தான் ஜாபர் (44), மட்தேவ் புச்கின்காம் (31) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

இவர்கள் அனைவரும் 60 Queen Street West நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கனடா மிரர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல