வெள்ளி, 23 நவம்பர், 2012

வழக்கிலிருந்து புலித் தலைவர் பிரபாகரன் பெயரை நீக்கக் கோரி க்கை

சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், பிளாட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், பிளாட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ராகவன் (எ) சிவகுமார் ஆகியோர் சுட்டதில் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், முகுந்தன் (எ) உமா மகேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.


இதையடுத்து, பிரபாகரன் மற்றும் சிவகுமாரை மாம்பலம் போலீசார் கைது செய்து அவர்கள் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், மே 23ம் தேதி சிவனேஷ்வரன்(எ) நிரஞ்சன் சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டார். மே 25ம் தேதி கும்மிடிப் பூண்டி ரயில் நிலையத்தில் உமா மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதும் ஆயுத தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர்கள் தலைமறைவானார்கள்.இந்த வழக்கு 7 ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

4 பேர் மீதும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களாக வழக்கு விசாரணை நடந்து தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,"முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபாகரன் இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்டார்.அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 19 ல் கண்டுபிடிக்கப்பட்டது என்று டெல்லியில் உள்ள இன்டர்போல் உதவி இயக்குனர் தகவல் அனுப்பியுள்ளார்.

சிவகுமார் இந்தியாவைவிட்டு வெளியேறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை. ஜோதீஸ்வரன், ஹாங்காங் நாட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. நிரஞ்சன் இறந்துவிட்டதாக சிபிசிஐடிக்கு தகவல் வந்துள்ளது.

எனவே, இந்த வழக்கிலிருந்து பிரபாகரன், சிவகுமார், ஜோதீஸ்வரன், நிரஞ்சன் ஆகியோரை நீக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல