இவரை குறைந்தது 13 தடவைகள் படுகொலை செய்கின்றமைக்கு புலிகள் முயன்று தோற்றுப் போனார்கள் என்பது உலகம் அறிந்த விடயம். தேவானந்தாவை படுகொலை செய்கின்றமைக்கு விதம் விதமான உத்திகளை எல்லாம் கையாண்டு கொண்டே இருந்தார்கள் புலிகள். ஆயினும் இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.
பழைய ஈ. பி. ஆர். எல். எப் இன் இராணுவ தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா பாலஸ்தீனத்தில் பயிற்சிகள் பெற்றவர். கராட்டேயில் கறுப்புப் பட்டி பெற்றவர். காரைநகர் கடல் படை தளம் மீது 1985 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி ஈ. பி. ஆர். எல். எப் ஆல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர் இவர்தான்.
இவர் தனிப்பட்ட பாதுகாப்பில் எப்போதும் தீவிர கவனத்துடன் இருந்து வந்திருக்கின்றார். மொட்டை மாடியில் உடல் பயிற்சி செய்ய மாட்டார். வாகனத்தை தனியான இடத்தில் நிறுத்தி வைத்திருக்க மாட்டார். இவரது போக்குவரத்து நடைமுறையை நெருக்கமானவர்களால்கூட ஊகிக்க முடியாது. எப்போதும் இரு பிஸ்டல்களை கூடவே வைத்திருப்பார்.
அரசியல்வாதிகளின் வாகனங்களுக்கு முன்னாலும், பின்னாலும் பாதுகாப்பு வாகன தொடரணிகள் செல்கின்றமையை நாம் காண்கின்றோம். இவ்வுத்தியை நம் நாட்டில் முதன்முதல் முறையாக கையாண்டவரும், அடிக்கடி வளப்படுத்திக் கொண்டவரும் தேவானந்தாதான்.
புலிகளால் நடத்தப்படக் கூடிய தாக்குதல்கள் குறித்து இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் புலனாய்வுப் பிரிவினரால் இவருக்கு தகவல்கள், எச்சரிக்கைகள் அவ்வப்போது வழங்கப்பட்டுக் கொண்டேதான் இருந்தன. ஆனால் சொந்த உளவாளிகளை கொண்டு தகவல்களை அறிந்து கொள்கின்றமையில் தனிப்பட கவனம் செலுத்தி வந்திருக்கின்றார்.
புலிகள் இயக்கத்தில் அதிரடிப் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து கொள்கின்ற வீரர்கள் ஒவ்வொருவரிடமும் பிரபாகரன் கேட்ட ஒரு கேள்வி.... உன்னால் டக்ளஸை கொல்ல முடியுமா? என்பதுதான் என்று சொல்லப்படுகிறது.
டக்ளஸை படுகொலை செய்கின்றமைக்காக புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் மூளையை கசைந்து பிழிந்து எத்தனையோ திட்டங்களை வகுத்து வந்திருக்கின்றார்.
இதில் ஒன்றுதான் இத்திட்டம்...
புலிகளின் கோட்டையாக வன்னி விளங்கிய கால கட்டம். ஆனால் யாழில் இருந்து கொழும்பு வரை புலிகளின் தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. இப்போது போல அப்போதும் யாழில் தேவானந்தாவின் பிரதான தங்குமிடமாக ஸ்ரீதர் தியேட்டர் இருந்து வந்தது.
கோடை காலங்களில் யாழ்ப்பாணத்து இளையவர்கள் வானத்தில் பட்டங்கள் பறக்க விடுவார்கள். சிறியவை முதல் பெரியவை வரை பட்டங்கள் பறக்கும். ஆளுயர இராட்சத பட்டங்களும் இவற்றுக்குள் அடக்கம்.
ஒரு நாள் எதேச்சையாக வானத்தைப் பார்த்து இருக்கின்றார் தேவா. ஸ்ரீதர் திரையரங்குக்கு மேலாக இராட்சத பட்டம் ஒன்று பறந்து கொண்டு இருந்தது. தேவாவின் மனதில் ஏதோ பொறி தட்டியதால் அப்பட்டத்தையே தொடர்ந்து சில நிமிடங்கள் உற்று நோக்கிக் கொண்டு இருந்தார்.
இந்த இராட்சத பட்டம் தற்போதைக்கு ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருக்க வேண்டும், குண்டு கட்டப்பட்ட பட்டம் மூலம் திரையரங்கைத் தாக்க சந்தர்ப்பம் இருக்கின்றது என்று மெய்ப் பாதுகாவலர்களுக்கு சொன்னார் தேவா.
பட்டம் பறக்க விட்டு விளையாடுகின்ற இளையவர்களுக்கு ஸ்ரீதர் திரையரங்குக்கு மேலால் எனிமேல் பட்டம் விட வேண்டாம், வேறு இடங்களுக்கு சென்று பட்டம் விடுங்கள் என்று இளையவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
ஒரு வருடம் கழித்து. புலி முக்கியஸ்தர் ஒருவர் படையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர், பறக்கும் பட்டத்தில் அமைச்சர் தேவா மீது தாக்குதல் நடத்த பொட்டம்மான் திட்டமிட்டு, ஒத்திகை பார்த்து இருந்தார் என்கிற தகவலை படையினரின் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக