சனி, 1 டிசம்பர், 2012

தம்பதிகள் சிறையில் இருப்பது உள்நாட்டு விவகாரம் இதில் தலையிட முடியாது

நார்வே நாட்டில் குழந்தையைக் கண்டித்த இந்திய பெற்றோர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்குக்கு நாளை தீர்ப்பு வரவுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.

நார்வே நாட்டில் குழந்தைகளை கண்டிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப் படும் என்பது அந்நாட்டின் விதிமுறை. நார்வேயில் தகவல் தொழில் நுட்பத்துறை பணிபுரிந்து கொண்டிருக்கும் சந்திர சேகரையும் வரத்து மனைவியையும் நார்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்களது குழந்தை ஸ்ரீராமை கண்டித்ததாகவும்,. இது பற்றி ஸ்ரீராம் கொடுத்த புகாரின் பேரிலும் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்துள்ளனர் என்று தெரிகிறது. இவர்கள் மீதான வழக்குக்கு நாளை தீர்ப்பு வரும் நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இந்த விவகாரம் வந்த போது,

இது உள்நாட்டு விவகாரம், இதில் அந்நிய நாடுகள் தலையிடுவது என்பது முறையான செயல் அல்ல. எனவே அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்றும், இந்தியாவில் இருந்து எந்தமாதிரி உதவிகளை அவர்களுக்கு செய்ய முடியும் என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்தி:
7 வயது சிறுவன் கூறிய புகாரால் தாய் தந்தையர் நோர்வேயில் கைது !!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல