வியாழன், 6 டிசம்பர், 2012

அரச முதியோர் இல்லம், கைதடி. கணவனுக்காக மனைவி வாழ்விடம் தேடி………

அந்திப் பொழுதின் சாயல்கள் வானத்தை அலங்கரித்து நின்றன. கணவனும் மனைவியுமாக இரு முதியவர்கள் கைதடி அரச முதியோர் இல்லத்தினுள் வந்தமர்ந்து கொள்கின்றனர். மனைவியின் கண்களில் கண்ணீர் வார்த்தைகளையும் முந்திக்கொண்டு பிரசவமாகிக் கொண்டது.

கணவனின் உதட்டில் சிரிப்பு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ” ஆறு பிள்ளைகளைப் பெற்றும் அனாதைகளாகி விட்டோம்.” அதிரடியான வார்த்தைகள் அதிர்ந்து கொண்டன. பிள்ளைகளுடனும் அயலவர்களின் ஆதரவுடனும் வாழ்ந்து கொண்டமை நிஐமாகிக் கொண்டது. பிள்ளைகளின் கதவடைப்பு இப்போது இவர்களை நிலைகுலைய வைத்து விட்டது.

பிள்ளைகள் பராமரித்திருக்கிறார்கள். தொடரமுடியவில்லை என்பது தெரிந்தது. பிள்ளைகளை விட்டு விலகியமை பாரிய அதிர்ச்சியானதும் புரிந்தது. கணவனின் வார்த்தைகள் குறைப்பிரசவங்களாகிக் கொண்டிருந்தன.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்து வைத்த திருமணத்தில் கணவன் மனைவியை இறுதிவரை காக்க வேண்டும் என்ற தார்ப்பரியங்கள் இருந்தன. இன்று இந்த சடங்கின் மகத்துவத்தைக்காத்து கணவனுக்கு வாழ்விடம் தேடுவதற்காக மனைவி வந்துள்ளார். முதுமையின் புதுமையை இந்தக்காணொளியில் காணுங்கள். கணவனின் வாழ்வுக்காக வயோதிபக் கோலத்திலும் பயணிப்பது புதுமையாக உள்ளது அல்லவா?
குடும்பச் சண்டையி்ல் மூழ்கிக் கிடந்து, சமூகக்கட்டமைப்பை மாற்றும் நடவடிக்கைகள் சரிதானா? காணொளியைக் கண்டுகொண்டே சிந்திப்போம்.

த.கிருபாகரன்
அத்தியட்சகர்
அரச முதியோர் இல்லம், கைதடி.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல