வெள்ளி, 7 டிசம்பர், 2012

விண்டோஸ் பெட்டிகள் ஒரு பார்வை

விண்டோஸ் இயக்கத்தில் நாம் நாள்தோறும் பல பாக்ஸ்களைப் பயன்படுத்துகிறோம். கம்ப்யூட்டர் பற்றி படிக்கையில், மெனு, லிஸ்ட், டெக்ஸ்ட் பாக்ஸ், ட்ராப் டவுண் மெனு எனப் பலவற்றைக் கேள்விப்படுகிறோம். பயன்பாட்டில் பல வேளைகளில் இவற்றை, ஒன்றுக்கொன்று தவறுதலாகப் புரிந்து கொள்கிறோம். இங்கு அவற்றைத் தெளிவாகக் காணலாம்.

1.டெக்ஸ்ட் பாக்ஸ் (Text Box): கம்ப்யூட்டர் மலர் கட்டுரைகளில், பல வேளைகளில், “இப்போது இன்னொரு பெட்டி பாப் அப் ஆகி வரும். அதில் உங்கள் தகவலை டைப் செய்திட வேண்டும்” என எழுதி இருப்போம். ஒரு சிறிய பாக்ஸ் தரப்பட்டு அதில் நீங்கள் உங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடக் கேட்டுக் கொள்ளப்பட்டால், அல்லது தேவையாகத் தரப்பட்டால், அதுவே டெக்ஸ்ட் பாக்ஸ். எடுத்துக் காட்டாக, ஒரு புதிய போல்டர் ஒன்று அமைக்கிறீர்கள். அதில் என்று முதலில் மாறா நிலையில் கொடுக்கப்பட்டு, பின்னர் நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்திடக் கேட்டுக் கொள்ளப்படும். இந்த பாக்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் ஆகும்.

2. ட்ராப் டவுண் லிஸ்ட் (Drop Down List): பலரும் இதனை ட்ராப் டவுண் மெனு என்று எழுதுகின்றனர். இது என்ன? நீங்கள் மேற்கொள்ள விரும்பும் செயல்பாடுகள் பலவற்றினை உங்கள் விருப்பத் தேர்வாக, ஒரு பட்டியலில் கொடுக்கப்படும். இதுவே ட்ராப் டவுண் லிஸ்ட். இதனைத் திறக்கவும், மூடவும் செய்திடலாம். மூடி இருக்கையில், இறுதியாகத் தேர்ந்தெடுத்த விருப்பத் தேர்வினைக் (Options) காட்டும். திறக்கப்பட்ட நிலையில், அனைத்து ஆப்ஷன்களையும், நீங்கள் தேர்வு செய்வதற்காகக் காட்டும். திறப்பதற்கு, இதன் வலது புறம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறி மீது கிளிக் செய்திட வேண்டும். பட்டியலில் உள்ள எதனைக் கிளிக் செய்தாலும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பம் ரத்து செய்யப்பட்டு, புதிய விருப்பம் செயல்பாட்டிற்கு வரும்.

3. லிஸ்ட் பாக்ஸ் (List Box): இதனையும் ட்ராப் டவுண் மெனு என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். அல்லது ட்ராப் டவுண் லிஸ்ட் என அழைக்கின்றனர். ஏனென்றால், இந்த பெட்டியிலும் நாம் தேர்ந்தெடுக்கப் பல விருப்பங்கள் கொடுக்கப்படும். ஆனால் இது ட்ராப் டவுண் லிஸ்ட் அல்லது மெனு அல்ல. ஏனென்றால், இது திறக்கப்பட்டே இருக்கும். விருப்பத் தேர்வு செய்திட அனைத்தும் காட்டப்பட்டே இருக்கும். இவற்றைப் பெற எந்த அம்புக் குறியையும் கிளிக் செய்திட வேண்டியதில்லை. அனைத்து விருப்பங்களையும் காண வேண்டும் எனில், அம்புக் குறியினைக் கிளிக் செய்வதற்குப் பதிலாக, இதில் தரப்பட்டிருக்கும் ஸ்குரோல் பாரில் கிளிக் செய்து மேலும் கீழும் நகர்த்த வேண்டும். நமக்கு விருப்பமானதை இந்த ஸ்குரோல் பாரினை நகர்த்துவதன் மூலம் பெற்று, இடது கிளிக் செய்தால், இது ஹைலைட் செய்யப்படும். மாற்றாக இன்னொரு வழியும் உள்ளது. ஸ்குரோலிங் செய்திடாமல், உங்கள் விருப்பத்தினைப் பெற, மேலாக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில், விருப்பத்தின் பெயரை டைப் செய்திடத் தொடங்கலாம். அந்த விருப்பம் பெட்டியில் இருந்தால், உடனடியாக அது காட்டப்படும். பின்னர் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.
அருகில் உள்ள படங்களைக் காணவும். முதலாவதாகக் காட்டப்பட்டிருப்பது டெக்ஸ்ட் பாக்ஸ். இதில் உங்கள் விருப்பமானதை டைப் செய்திடும் வசதி உள்ளதால், இது டெக்ஸ்ட் பாக்ஸ். இரண்டாவதாக, லிஸ்ட் பாக்ஸ். ஏனென்றால், இங்கு லிஸ்ட் கீழாக விரிக்கப்பட்டு, அனைத்து விருப்பங்களும் காட்டப்பட்டுள்ளன. மூன்றாவதாக உள்ளது ட்ராப் டவுண் லிஸ்ட். அம்புக் குறியில் கிளிக் செய்து, நாம் நமக்குத் தேவையானதைப் பெற்றுப் பின்னர் தேர்ந்தெடுக்கிறோம்.

4.டயலாக் பாக்ஸ் (Dialogue Box):ஒரு செயல் அல்லது பொருள் என்ன எனச் சொல்லும் பெட்டி. வழக்கமாக, ஒரு செயலை நீங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளும் பாக்ஸ். எடுத்துக் காட்டாக, வேர்ட் தொகுப்பில், டாகுமெண்ட் ஒன்றை சேவ் செய்திட மெனு பார் சென்று, File என்பதில் கிளிக் செய்கிறீர்கள். கீழாக விரியும் ட்ராப் டவுண் லிஸ்ட்டில், Save என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்தவுடன், உங்களுக்குக் கிடைப்பதுதான் டயலாக் பாக்ஸ். சில வேளைகளில், இத்தகைய டயலாக் பாக்ஸில், கேள்வி ஒன்று கேட்கப்பட்டு, உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கப்படும். பதிலாக நீங்கள், அதில் தரப்பட்டுள்ள பல டேப்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. செக் பாக்ஸ் (Check Box): மேலே தரப்பட்டுள்ள அனைத்திலும் இருந்து வேறுபட்ட செயல்பாட்டினைக் கொண்டது செக் பாக்ஸ். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்களை நாம் தேர்வு செய்திடலாம். செக் பாக்ஸ் பட்டியல் ஒன்றில் பல விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு எதிராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் மவுஸால் கிளிக் செய்கையில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி, நம் விருப்பங்களைத் தேர்வு செய்திடலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விருப்பங்களும் செயல்பாட்டிற்கு வரும். மற்ற தேர்வுகள் போல, ஒன்றைத் தேர்வு செய்தவுடன் முதலில் தேர்வு செய்தது ரத்து செய்யப்பட மாட்டாது. ரத்து செய்ய வேண்டும் என எண்ணினால், மீண்டும் ஒருமுறை அதில் கிளிக் செய்திட வேண்டும். மேலே சொல்லப்பட்ட தொழில் நுட்பச் சொற்களை, ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தினாலும், செயல்பாட்டினைத் தெரிந்து வைத்து, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதுதான் நமக்குத் தேவை. இருப்பினும் நாம் ஒன்றை எண்ணி, அதனை எதிர்பார்த்து ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க இந்த விளக்கங்கள் பயன்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல