புதன், 20 பிப்ரவரி, 2013

“பிரபாகரனின் மகன் சரணடைந்த போட்டோக்களை உறுதிப்படுத்த முடியவில்லை”

“நம்ப முடியலிங்க”
“விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தமது மெய்ப்பாதுகாவலர்களுடன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தபின் கொல்லப்பட்டதாக காண்பிக்கப்படும் போட்டோக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை” இவ்வாறு கூறியிருக்கிறார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சித்.

செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சித், “மீடியாக்களில் வெளியாகியுள்ள போட்டோக்களை நானும் பார்த்தேன். ஆனால் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கை ஒரு முக்கியமான அயல்நாடு, நண்பன். எல்லாத் துறைகளிலும் இலங்கையுடன் இந்தியா உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசும், இந்த போட்டோக்கள் நம்பகத்தன்மை அற்றவை. போலியானவை என்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு விடுதலைப்புலிகள் நெடியவன் பிரிவின் தகவல் தொடர்பாளர் ஆதித்தன் மாஸ்டர், “விடுதலைப் புலிகளின் தலைவர் தம்முடன் ஆயிரக் கணக்கான போராளிகளை போர்முனையில் இருந்து அழைத்துச் சென்று, மறைவிடம் ஒன்றில் பயிற்சி கொடுத்துவரும் நிலையில், தமது மூத்த மகன் (சார்ள்ஸ் ஆன்டனி) ஏற்கனவே இறந்த நிலையில், இரண்டாவது மகனை சரணடையச் சொல்லி, 5 மெய்பாதுகாவலர்களுடன் அனுப்பி வைத்திருப்பாரா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அப்படியானால், இந்த மாஸ்டர் என்னதான் சொல்ல வருகிறார்?


Viruvirupu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல