தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வன் 12 வயது பாலச்சந்திரன் படையினரால் கொல்லப்படவே இல்லை என்று தெரிவித்து உள்ளார் இறுதி யுத்தத்தின்போது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா.
பாலச்சந்திரன் படையினரால் பிடித்து வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார் என்று படம் எடுத்து உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் அடுத்த மாதம் இடம்பெற உள்ளது. இந்நிலையிலேயே நோ ஃபயர் சோன் என்கிற படம் ஜெனிவா மனித உரிமைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
பாலச்சந்திரன் இராணுவ பங்கர் ஒன்றுக்குள் உள்ளார், இவரது கையில் தின்பண்டம் உள்ளது, பின் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காட்டுகின்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்று உள்ளன.
படத்தின் இக்காட்சிகளை கொண்ட புகைப்படங்கள் உலக பத்திரிகைகள் பலவற்றிலும் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பி. பி. சி சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே படையினர் 12 வயது பாலச்சந்திரனை பிடித்து இருக்கவில்லை என்றும் இப்படுகொலைக் குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும் இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை ர்ங்கும் எப்போதும் எதிர்கொள்ள தயாராக உள்ளார் என்றும் பொன்சேகா தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக