வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

நாயின் குரல்வளையை நசுக்கி கொன்ற பெண் குற்றவாளி, விலங்குக்கு கொடுமை செய்த வேறு சம்பவத்தில் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுகிறார்

நாயின் குரல் வளையை அழுத்திக் கொன்ற குற்றச் சாட்டுகளுக்காக முன்விசார ணைக் கட்டுக்காப்பில் இருக்கின்ற றீட்டா மூல்லர், 29 நாய்களுடன் தரம் குறைந்த நிலையில் அவரது வீட்டில் இருக்கக் காணப்பட்டார்.

50 வயதான றீட்டா மூல்லர், நாயின் குரல்வளையை நெரித்துக் கொன்ற குற்றச் சாட்டுக்காக இன்னமும் முன்விசாரணைக் கட்டுக்காப்பில் விசாரணையைக் காத் திருக்கின்றார். அவர் 29 நாய்களைத் தன் வீட்டில் இழிந்த நிலையில் வைத்திருந்த குறிறச்சாட்டுகள் தொடர்பாகத் தண்டிக்கப்பட்டார்.

அவள் நாயைத் தூக்கிலிட்டுக் கொன்றாள் என்ற குற்றச் சாட்டுக்காக முன்விசார ணைக் கட்டுக்காப்பில் இன்னமும் இருக்கும்போது, கலிடோனில் இருக்கின்ற தன்னைத்தானே நாய்மீட்பர் எனக்கூறிக் கொள்ளும் ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், வேறெரு சம்பவத்தில் டசின் கணக்கான நாய்களை தன் விட்டில் இழிந்த நிலையில் வைத்திருந்தமைக்காக ஆயுட்காலத்தில் வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கக்கூடாதெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

50 வயதான றீட்டா மூல்லர் ஒன்டாரியோ விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை தடுக்கும் சங்கத்துக்கு, அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட நாய்களைப் பராமரித்து மீளளிக்கும் செலவாக 16,537.03 டொலர் கொடுக்குமாறு கட்டளையிடப்பட்டார்.

ஒரு துப்பினைத் தொடர்ந்து, ஒன்டாரியோ விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை தடுக்கும் சங்கம், செப்டம்பர் 2011ல் கல்டனிலுள்ள மூல்லரின் வீட்டைச் சோதனை செய்தது. பரிசோதகர்கள், தரங் குறைந்த வளர்ப்புநிலையில், உண்ணி நிறைந்து படுமோசமான உடல்நிலையோடு, மிதமிஞ்சிவளர்ந்த நகங்களோடும் 29 நாய்களைக் கண்டனர்.

மூல்லர் விலங்குகளுக்கு கொடுமை செய்த ஐந்து குற்றங்களுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டார். பின்பு மூன்று குற்றங்கள் விடப்பட்டன. “சட்டத்தின் பார்வையில் விலங்குகள் நலம் கடுமையாகப் பார்க்கப்படுவது நமக்குப் பெரும் ஊக்கத்தைத் தருகின்றது”என்றார் தலைமைப் பரிசோதகர் கொன்னி மல்லோறி. “பொறுப்பில்லாத ஒரு விலங்கின் சொந்தக்காரர் கையிலும் ஒரு விலங்கும் துன்பப்படக் கூடாது.”

மூல்லருடைய 30 வயது மகன் மைக்கேலுக்கும் 2,500 டொலர் குற்றப் பணம் கட்டுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. திர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் நோக்கம் குட்மான் கொண்டுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல